சிறையில் ப.சிதம்பரம் 100வது நாள்! நம்பிக்கை அளித்த ராகுல் காந்தி!

நாளையுடன் திகார் சிறையில் தன்னுடைய 100வது நாளை கொண்டாட இருக்கிறார் முன்னாள் நிதித்துறை மற்றும் உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம்.


அவர் மீது எவ்விதமான ஆதாரமும் இல்லை என்றாலும் குறைந்தது 100 நாட்களாவது சிறையில் வைத்திருந்துதான் அனுப்பவேண்டும் என்று முடிவெடுத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

அப்படித்தான் இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையும் நல்லவிதமாகவே செல்கிறது. அவருக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் டிசம்பர் 12ம் தேதி வரை காவலை நீடித்து இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் நல்ல தகவல் இந்த வாரமே வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று ப.சிதம்பரத்தை சிறைக்குச் சென்று ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஆறுதல் தெரிவித்தனர்.  

ஏற்கெனவே சோனியா காந்தி சிறைக்குச் சென்று சிதம்பரத்தை சந்தித்து இருந்தார். அப்போது ராகுலுக்கும் சிதம்பரத்துக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக சொல்லப்பட்டது. இப்போது நேரில் சென்று சந்தித்து இருப்பதன் மூலம் காங்கிரஸில் சிதம்பரம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் முதல் வாரத்திற்குள் வந்துவிடும் நம்பிக்கையில் இருக்கும் நிலையில், இன்று மகாராஷ்டிரா அரசியல் குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.