10 வயது சிறுமி அகால மரணம்! ஆனால் 81 பேரின் உயிரை காப்பாற்றிய ஆச்சரியம்! நெகிழ வைக்கும் சம்பவம்!

10 வயது சிறுமி இறந்த பிறகும் 81 பேருக்கு பேருதவி செய்த சம்பவமானது அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் துளாரே காலனி எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு ஹனா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளின் பெயர் பிரான்சின் சலாசர். சலாசரின் வயது 10. அதே பகுதியை சேர்ந்த ஒரு பள்ளியில் படித்து வருகிறார். 

ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதியன்று ஹனா தன்னுடைய மகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணினார். அவருக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கி தர முடிவெடுத்தார். சாலையின் மறுபுறத்தில் இருந்த ஐஸ்கிரீம் கடைக்கு சலாசர் செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

உடனடியாக சலாசர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10-ஆம் தேதியன்று அவருக்கு மூளை சாவு ஏற்பட்டுள்ளது. சில மணி நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது மருத்துவமனையிலிருந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இறந்த பின்னர் தன்னுடைய உடற்பாகங்களை தானமளித்து விடுமாறு தன் தாயாரிடம் சலாசர் கூறியுள்ளார். அதன்படி மருத்துவர்கள் அவருடைய உடல் பாகங்களை தானமளிக்க முன்வந்தனர். சலாசர் அளித்த தானத்தின் மூலம் 6 பேர் உயிர் பெற்றிருப்பதாகவும், 75 பேர் உதவி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

"சலாசர் மிகவும் பாசமானவர். அவர் ஒருபோதும் சுயநலமாக யோசித்ததே இல்லை அனைவரின் நலனையும் தன்னுடைய நலனாக கொண்டு வாழ்ந்து வந்தார்" என்று அவருடைய தாயார் ஹனா கூறினார். அவருடைய இறுதி சடங்கில் மருத்துவமனையின் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த சம்பவமானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.