1 கிலோ மாவு வாங்கினால் 1 குடம் நிலத்தடி நீர்! களைகட்டும் வியாபாரம்!

சென்னையில் ஒரு கிலோ இட்லி/ தோசை மாவு வாங்கினால், ஒருக் குடம் தண்ணீர் இலவசம் என விளம்பரம் செய்து கல்லாக்கட்டி வரும் மாவுக்கடை..


சென்னையில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வரும் நிலையில், திருவல்லிக்கேணியில் உள்ள எல்லம்மன் மாவுக் கடையில் ஒருக்கிலோ இட்லி அல்லது தோடை மாவு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஒருக்குடம் தண்ணீர் வழங்கப்படும் என விளம்பரம் செய்து வாடிக்கையாளர் கவனத்தை ஈர்த்துள்ளார்கள்.

இந்த விளம்பரத்தின் படி வாடிக்கையாளர் மாவு வாங்க வரும் போது, கையில் ஒரு குடத்தை மட்டும் கொண்டு வர வலியுறுத்தும் கடை உரிமையாளர், நிலத்தடி நீர் என்பதால் மக்கள் அந்த தண்ணீரை காய்ச்சி, வடிக்கட்டி உபயோகிக்க அறிவுறுத்துகின்றனர்,.இந்த அறிவிப்பை அடுத்து எல்லம்மன் மாவுக்கடை மக்கள் கூட்டட்தால் அலைமோது வருவதாக, அந்த கடை உரிமையாளர் பூரிக்கிறார்.

மேலும் மக்களுக்கு தண்ணீரின் அத்தியாவசியத்தை உணர்த்தவும் இந்த யுக்தியைக் கையாண்டதாக கூறுகிறார். ஏற்கனவே புளித்த மாவு சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்த மாவுக்கடை ஆஃப்பர் வரவேற்ப்பை பெற்றுள்ளது எனலாம்.