அம்மாடியோவ்! ஒரே ஒரு ஜிபி டேட்டா விலை 5000 ரூபாயாம்! எங்கனு தெரியுமா?

உலகிலேயே இந்தியாவில்தான் ஒரு ஜிபி டேட்டாவின் விலை மிகவும் குறைவாக உள்ளது.


அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. குறிப்பாக செல்போன் தொழில்நுட்பத்தில் இந்தியா அதிவேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. சுமார் 110 கோடி செல்போன்கள் இந்தியாவில் பயன்பாட்டில் இருப்பதாக புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. இதில் 56 கோடி செல்போன்கள் தொடர்ந்து இணையதளத்திலேயே இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் மற்றும் நெட்வொர்க் சேவை காரணம் உலகின் மிகப்பெரிய சந்தையாக இருக்கும் இந்தியாவில் ஒரு ஜிபி டேட்டா வெறும் 18 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் காரணமாக பட்டி தொட்டி எங்கும் இணைய சேவையின் விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 430 கோடி பேர் செல்போன்களில் தொடர்ந்து இணைய தளத்தைப் பயன்படுத்துகின்றனர் அதில் முதலிடத்தில் இருக்கும் நாடு சீனா.

அந்நாட்டில் 82 கோடி பேர் செல்போன்களில் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 30 கோடி பயனர்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இணையதளம் அதிவேகமாக இயங்கும் நாடாக சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளது.

ஆனால் அங்கு ஒரு ஜிபி டேட்டாவின் விலை சுமார் 250 ரூபாய் ஆகும். டேட்டாவின் விலை 40 ரூபாய்க்கு குறைவாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் கிர்கிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இதில் ஒரு ஜிபி டேட்டா வுக்கு அதிகமாக பணம் செலவிடும் நாடு ஜிம்பாவே அங்கு ஒரு ஜிபி டேட்டா சுமார் 5300 ரூபாய் ஆகும்.