கர்ப்பத்தை கலைத்து மலடி பட்டம் கட்டி கமலின் முதல் மனைவி பட்ட பாடு! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

முதல் மனைவியின் கர்ப்பத்தை கலைத்து மலடி என்று பட்டம் கட்டி கமலஹாசன் விவாகரத்து செய்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.


தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத ஒருவராக தற்போது வரை வலம் வந்து கொண்டிருப்பவர் உலகநாயகன் கமலஹாசன். கமலின் திரையுலக வாழ்க்கை உச்சத்தை தொட்டது. ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் சறுக்கல்கள் நிறைந்ததாகவே வாழ்க்கை அமைந்துள்ளது. 

1978 ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் கமலஹாசன். இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லாததால் பத்து வருடங்கள் கழித்து விவாகரத்து செய்து கொண்டார். அதன்பிறகு சரிகாவை திருமணம் செய்த கமல் அவரையும் விவாகரத்து செய்து, நடிகை கௌதமி உடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தார். 

இதற்கிடையில் கடந்த 2016ஆம் ஆண்டு கமல்ஹாசனை பிரிவதாக கவுதமி அறிவித்ததையடுத்து, தற்போது கமல் தனியாக வாழ்ந்து வருகிறார். திருமண வாழ்க்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், மனமார ஒன்று சேர்ந்தால் எந்தவித திருமணமும் அதற்கு தேவையில்லை என்றும் பல பேட்டிகளில் கமல் கூறி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. 

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நமது எம்ஜிஆர் என்ற பத்திரிக்கையில் கமல் குறித்த ஒரு கவிதை வெளியானது. வழக்கமான கவிதை போல அல்லாமல் கமலின் சொந்த வாழ்க்கையை திட்டியவாறு இக்கவிதை அமைந்திருந்தது. அதில் முதல் மனைவியான வாணி கணபதியை குழந்தை பெறாதவர் என கூறியது மிகப்பெரிய தவறு.

இருவருக்கும் திருமணம் ஆகி வாணி கணபதி கர்ப்பமாக இருந்த நிலையில், கமல் வேண்டுமென்றே அவரை ராட்டினத்தில் ஏற்றி கர்ப்பம் களைய காரணமாக இருந்திருக்கிறார் என மிகப் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தது. இது தற்போது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.