தவமாய் தவமிருந்து குழந்தை பெற்றெடுத்த மனைவி! அடுத்த நிமிடமே தலாக் கொடுத்த கணவன்! பதற வைக்கும் காரணம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் வரதட்சனை கேட்டு கொடுமைப் படுத்தி வந்த கணவன் 2வது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் முத்தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.


உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி அருகே ஜனா பஜாரை சேர்ந்த ஜாப்ரி அஞ்சும் என்ற பெண்மணி ஹைதர்கஞ்ச் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது கணவர் திருமணம் ஆன முதலே கூடுதல் வரதட்சிணை கேட்டு  தன்னை சித்திரவதை செய்து வந்ததாக தெரிவித்து உள்ளார்.

மேலும் தனக்கு முதலில் பெண் குழந்தை பிறந்த நிலையிலும் இரண்டாவது குழந்தையும் பெண்ணாக இருந்ததால் கணவர் மேலும் ஆத்திரம் அடைந்துள்ளதாகவும் வரதட்சனை கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும் என சித்திரவதை செய்ததாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அது மட்டுமின்றி அவர் கேட்ட வரதட்சினை பணம் தராததால் ஆகஸ்ட் 15ம் தேதி தன்னிடம் தலாக் கூறி விவகாரத்து செய்து விட்டதாக கண்ணீர் மல்க வேதனையுடன் புகார் அளித்துள்ளார் ஜாப்ரி அஞ்சும். இதையடுத்து ஹைதர் கஞ்ச் காவல்துறையினர் பெண்ணின் புகாரை ஏற்று அவரது கணவர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.

இதுகுறித்து அயோத்தி காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர குமார் கூறும்போது முத்தலாக் குறித்த புரிந்துணர்வு அடித்தட்டு மக்களை சென்றடையவில்லை என்றும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என தெரிவித்தார்.

மேலும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான ஜாப்ரி அஞ்சும் புகாரை ஏற்று அவரது கணவர் மீது வழக்குப்பதிந்துள்ளதாக தெரிவித்த காவல் கண்காணிப்பாளர் அவருக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இஸ்லாமிய பெண்களின் நலன்களுக்காக முத்தலால் நடைமுறையை ரத்து செய்து நாடாளுமன்ற மாநிலங்களவையிலும், மக்களவையிலும் கடந்த ஜூலை மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் வடமாநிலங்களில் இந்த மசோதா குறித்த நடைமுறை பற்றி தெரியாத ஏழைகள் அவசரப்பட்டு தங்கள் மனைவிகளை முத்தலாக் நடைமுறையில் விவாகரத்து செய்கின்றனர்.

பின்னர் மனைவி புகார் அளித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்போதுதான் அதுபற்றி அவர்களுக்கு முழுமையாக தெரியவருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை முத்தலாக் சம்பந்தமாக இதுவரை புகார் ஏதும் வரவில்லை என்பது கொஞ்சம் நிம்மதியான செய்திதானே.