வைரமுத்துவுக்கு 13+ பெண்கள்..! ராதாரவிக்கு..? பாடகி சின்மயியின் உமன்ஸ் டே ஸ்பெசல் சீக்ரெட்ஸ்!

இன்னும் ஓரிரு நாட்களில் மகளிர் தினத்தை கொண்டாட உள்ள நிலையில் பாடகி சின்மயி பெண்களுக்கு நீதியே கிடைக்காத நாட்டில் இருந்துகொண்டு மகளிர் தினத்தை கொண்டாடியே ஆக வேண்டுமா? என கடுமையாக தன்னுடைய ட்விட்டர் பதிவின் மூலமாக சாடியுள்ளார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மீடு விவகாரம் மிகப்பெரியதாக பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து பெண்கள் பலரும் தங்களை பாலியல் சீண்டல் செய்தவர்களின் பெயர்களை தைரியமாக சமூக வலைத்தளங்களின் மூலம் வெளியிட்டு வந்தனர். அந்த வகையில் சினிமா பாடகியான சின்மயி கவிஞர் வைரமுத்து மீதும் பாடகர் கார்த்திக் மீது அடுக்கடுக்காக பல புகார்களை முன்வைத்தார்.

அதிலும் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும் பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். தற்போது இந்த விஷயமானது தனிந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. 

அதாவது மீடு இயக்கத்தில் சேர்ந்து 90க்கும் மேற்பட்ட பெண்கள் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான புகார்களை சுமத்தினர் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இதனை விசாரித்த நீதிமன்றம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உண்மை என தீர்ப்பளித்துள்ளது. 

இந்த தீர்ப்புக்குப் பின்பு பல பெண்களின் போராட்டம் நிறைந்துள்ளது. ஆகையால் பெண்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய போராட்டத்தை அவர்கள் சந்திக்க வேண்டும் என சமூக வலைத்தள வாசி ஒருவர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவைப் பார்த்த சின்மயி அதனைச் சுட்டிக்காட்டி புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் கவிஞர் வைரமுத்து இதுவரை 13 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருக்கிறார். அதேபோல் பாடகர் கார்த்திக் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். ஒருவேளை அந்த பெண்கள் புகார் அளித்தால் உடனடியாக அவர்களை டப்பிங் யூனியனில் இருந்து வெளியேற்றும் பணியை நடிகர் ராதாரவி மிகவும் சிறப்பாக செய்து வருகிறார். 

பெண்களிடம் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வரும் இவர்கள் இருக்கும் இந்த நாட்டில் மகளிர் தினம் அன்று மட்டும் மகளிரை பெருமையாக கூறி வரும் சூழ்நிலை தான் நிலவி வருகிறது. பெண்களை மதிக்க தெரியாமலும் அவர்களுக்கு தேவையான நீதியும் கிடைக்காமலும் இருக்கும் என்ற சூழ்நிலையில் எதற்காக இதை நாம் கொண்டாடி வருகிறோம் என கடுமையாக விமர்சித்திருக்கிறார் சின்மயி.

மேலும் அவர் மகளிர் தினத்தை கொண்டாடுவது நாள் மட்டும் போதாது முதலில் பெண்களை மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.