குடிகாரர்களுக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் ஓர் நற்செய்தி

அரசுக்கு வருமானம் அள்ளித்தருவதே டாஸ்மாக் மட்டும்தான். ஆனாலும், குடிகாரர்களை கேவலமாக பார்ப்பது மட்டும்தான் அரசின் கடமையாக இருக்கிறது


இந்த நிலையில், இன்று முதன்முதலாக குடிகாரர்கள் பற்றி எடப்பாடி அரசு யோசித்துப் பார்த்திருக்கிறது. அதன்படி இனிமேல் மதுபாட்டிலில் உள்ள எச்சரிக்கை விளம்பர வாசகத்தை மாற்றப் போகிறதாம். ஏனென்றால் இப்போது, ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த வாசகத்தை தமிழக அரசு மாற்றுகிறது. அதாவது, ‘மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர்... மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்’ போன்ற வாசகங்களை அறிமுகம் செய்கிறதாம்.

இந்த வாசகம் கடந்த 1937ம் ஆண்டு முதல் இடம்பிடித்தது என்பதால், புதுமையாக மாற்றியிருக்கிறார்கள். அதேபோன்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதம் 500 ரூபாய் சம்பளம் உயர்த்திக் கொடுத்துள்ளது. 

அதுசரி, ஏதோ நற்செய்தி என்று சொன்னீர்களே என்று கேட்கிறீர்களா..? இப்போதைக்கு கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதாக இல்லையாம்.

போதுமா மக்களே நற்செய்தி.