கருப்புக்கொடி போராட்டத்தைக் கண்டு அலறும் காங்கிரஸ்! ஸ்டாலின் வாக்குறுதி கொடுக்காமல் எஸ்கேப்!

கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்க்கு நாங்குநேரியை எந்த பிரச்னையும் செய்யாமல் ஸ்டாலின் கொடுத்தபோதே, அந்தத் தொகுதியை அவர் கை கழுவி விட்டார் என்று சொல்லப்பட்டது. அதுதான் இப்போது உண்மையாகியுள்ளது.


ஆம், தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை வெளியிட வேண்டும் என்று நாங்குநேரி சட்டசபையில் இருக்கும் அந்த இன மக்கள் சுமார் 64 கிராமங்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் செய்துவருகின்றனர்.

இவர்களை சரிக்கட்டுவதற்காக ஜான்பாண்டியனை அ.தி.மு.க. அமைச்சர்கள் வந்து சந்தித்து எந்த பிரயோஜனமும் இல்லை என்று ஆகிவிட்டது. ஏனென்றால் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் போன்றவர்கள் இல்லாமலே இந்தப் போராட்டம் தீவிரம் அடைந்துவருகிறது. 

இந்தப் போராட்டம் இப்போது சீவந்திய வளநாட்டார் கிராமங்களிலும் பரவியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் தேவேந்திரகுல மக்களின் வீடுகளில் கறுப்புகொடி ஏற்றப்பட்டது.

தற்போது மூலைகரைப்பட்டியில் அதிமுக வாகன தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்த வாகனத்தை மறித்து அந்த பிரச்சார வாகனத்தின் இருபுறங்களிலும் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் த.ம.மு.க. தலைவர் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது என்று கடம்மன்குளம் தளவாய்பாண்டி தலைமையில் எச்சரிக்கை விடுத்து பிளாக்ஸ் வாகன உரிமையாளரை வைத்து அகற்றி மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஸ்டாலின் இந்த மக்களிடம் வந்து பேசி உறுதிமொழி கொடுத்தால் போராட்டத்தை வாபஸ் வாங்குவதற்குத் தயாராக இருக்கின்றனர். ஆனாலும், ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட முன்வரவில்லையாம். காங்கிரஸ் தோற்றால் தோற்கட்டும் என்ற நல்ல எண்ணம்தானாம்..!

இந்த மக்கள் காலம் காலமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்கள் என்பதால், இந்தப் போராட்டம் காரணமாக காங்கிரஸ் கட்சிக்குத்தா சிக்கல் வரும் எனப்படுகிறது. அதனால்தான் அ.தி.மு.க. அமைதி காக்கிறதாம்.