மரம் நடுவதாகரூ.10 ஆயிரம் கோடி வசூல் வேட்டை! ஜக்கிக்கு எதிராக களம் இறங்கிய சின்ன அய்யா!

சென்னை மீனாட்சி கல்லூரியில் பருவநிலை மாறுதல்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்க்கு கோரிக்கை ஒன்று விடுத்துள்ளார்.


சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் பருவநிலை மாறுதல்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பருவநிலை மாற்றம் குறித்து உரையாற்றினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் செய்தியாளர்கள் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அவரின் காவிரிப் படுகையில் மரம் நடும் பணியை பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதியளித்த அன்புமணி ராமதாஸ், ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஒரு மரத்திற்கு 42 ரூபாய் என பணம் பெறாமல் தமிழகம் முழுவதும் மரம் நட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் பணம் வாங்காமல் தமிழகம் முழுவதும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பருவநிலை மாற்றம் குறித்து அன்புமணி ராமதாஸ் தெரிவிப்பது,

செய்தியாளரிடம் பேசிய, அன்புமணி ராமதாஸ், கனரக வாகனங்களில் இருந்து வெளிப்படும் கரியமிலவாயு தான் புவி வெப்பமயமாதலுக்கு மிக முக்கிய காரணம் என்றும், அரசு சார்பில் இயக்கப்படும் பொது போக்குவரத்தை அனைவரும் பயன்படுத்தினால் மாசு ஏற்படுவதை தடுக்கமுடியும் என்றும் அறிவுறுத்தினார். 

மேலும், பொதுமக்கள் அனைவரும் மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை பயன்படுத்த முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.