கொரோனா வைரஸை எதிர்த்து நிற்கும் மூலிகை சூப்..! கண்டுபிடித்த தஞ்சை தமிழன்!

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக தமிழ்நாட்டில் இளைஞர் ஒருவர் சூப் தயாரித்து வருவது வைரலாகி வருகிறது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 14,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 3,35,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனிடையே இந்த வைரஸ் தாக்குதல் உடல் முழுவதும் பரவாமல் இருப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அவ்வாறு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சிவா என்ற 28 வயது இளைஞர், நெல்லிக்காய், கேரட், சின்ன வெங்காயம், கருஞ்சீரகம், பூண்டு, இஞ்சி, வேப்பிலை, மஞ்சள் ஆகிய பொருட்களை சேர்த்து சூப் தயாரித்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார்.

இவர் அதே பகுதியில் பழச்சாறு கடை நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதலுக்கு எதிராக உலக நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மருந்துகளை உருவாக்குவதற்கு கடுமையாக போராடி வருகின்றனர். அதன் வரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய உணவுகளை அதிகளவில் சாப்பிட வேண்டும் என்றும், சீரிய இடைவெளியில் தொடர்ந்து கைகளில் கழுவ வேண்டும் என்றும் மருத்துவர்கள் உலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் இளைஞர் சிவாவின் இந்த முயற்சியை பாராட்டி அப்பகுதி மக்கள் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர் என்று கூறப்படுகிறது.