சேலத்து சோகம்! தாயின் கள்ளக்காதலால் அனாதையான 4 குழந்தைகள்! உணவின்றி தவிக்கும் பரிதாபம்!

சேலம் கொண்டலாம்பட்டி அருகே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் இருந்த 4 குழந்தைகள் உண்ண உணவின்றித் தவிக்கும் அவலம் நிகந்துள்ளது.


கொண்டலாம்பட்டியை அடுத்த இச்சமரத்துகாடு கிராமத்த்தை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி வேலைக்குத்தான் சென்றுகொண்டிருந்தார் என்ற போதிலும் அவருக்கு 2 திருமணங்கள் தேவைப்பட்டன. முதல் மனைவி பாப்பாத்திக்கு பிரகாஷ், ஹரி, கோபி, பூபதி  என 4 குழந்தைகள் 2-வது மனைவி சாந்திக்கு 2 குழந்தைகள் இந்நிலையில் செல்வராஜ் பெரியூர் என்ற இடத்தில் ஒரு கோயில் அருகில் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து பாப்பாத்தி தனது 4 குழந்தைகள், தனது 80 வயது தாய் மற்றும் மாமியாரை காப்பாற்ற கல்லு மாவு உடைக்கும் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று மிகுந்த சிரமத்துக்கிடையே குடும்பத்தை நடத்தி வந்ததார். இந்நிலையில் அண்மையில் கல்லுமாவு மில்லுக்குள்  பாப்பாத்தி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.

ஆலை முதலாளிதான் கொன்றுவிட்டதாக ஊர்க்காரர்கள் குற்றம் சாட்டும் நிலையில், பாப்பாத்தி மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருவருக்கும் இடையிலான கள்ளத் தொடர்பு தான் கொலையில் முடிந்ததாக சொல்கிறார்கள்.

இந்நிலையில் அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் 4 குழந்தைகளும் அனாதையாக நிற்கின்றன. சீமைக் கருவேல மரங்கள் சூழ்ந்த குக்கிராமத்தில் ஓலைக் குடிசைக்குள் உறங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் , கண்களை தேய்த்துக் கொண்டு சோகம் நிறைந்த முகங்களோடு வாசலில் வந்து அமர்ந்ததைப் பார்க்கும் போது பரிதாபமாக இருந்தது. 

அவர்களுக்கு பிறந்ததில் இருந்து நெல் சோறு உள்ளிட்ட சத்தான உணவுகள் கிடைக்காததால் இருவருக்கு காது கேட்காது என்றும், ஒரு சிறுவனுக்கு கண்பார்வைக் குறைபாடு உள்ளதாகவும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். தானும் 2 சிறுவர்களை வைத்துக்கொண்டு கூலிவேலைக்குச் சென்று வயிற்றைக் கழுவிக்கொண்டிருப்பதாகக் கூறும் செல்வராஜின் இரண்டாவது மனைவி சாந்தி 6 பேரை வைத்து தன்னால் எப்படி காப்பாற்ற முடியும் என்கிறார்.