திருமணம் செய்து கொள்வதாக சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞர் நாமக்கல் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்லாத்தையும் முடிச்சிட்டு கை கழுவிட்டான்! காதலனால் கர்ப்பமாகி குழந்தை பெற்ற 17 வயது பெண் கதறல்!
கொல்லிமலையை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆரியூர்நாடு குழிவளவை சேர்ந்த நந்தகுமார் என்ற இளைஞர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுமியிடம் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார் நந்தகுமார்.
இதனால் அந்த பெண் கர்ப்பம் தரித்துள்ளார். இதற்கிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை சிறுமி கேட்க அதற்கு நந்தகுமார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இப்படியே 10 மாதம் ஆன நிலையில், அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தற்போதும் அந்த சிறுமியை நந்தகுமார் திருமணம் செய்ய மறுத்ததால் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து நந்தகுமார் மீது சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், நந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.