ஏனுங் எடப்பாடிக்கார்ரே,உங்க 'யாதும் ஊரே' திட்டப் பேரே செரியில்லீங்கோவ்!

எடப்பாடியார் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் மர்மம் அவர் திரும்பி வந்தால்தான் தெரியும் என்று ஒபிஎஸ் சொன்னபோது,எதாவது இருக்குமோ என்று நினைத்தவர்கள் உண்டு.


ஆனால்,அவர்பாட்டுக்கு கால்நடைப் பண்ணைகளில் விசிட்டடித்து , பிஜேபிக்கு தனது லாயல்ட்டியை காட்ட கோமாதாவுக்கு உணவு ஊட்டுவதை பார்த்ததும் மக்கள் அவரை விட்டுவிட்டு அமெரிக்க வீதியில் வேட்டிகட்டி நிற்கும் செந்தில் பாலாஜியை ரசிக்க துவங்கிவிட்டார்.இந்த நிலையில் எடப்பாடியார் இதுவரை 16 அமெரிக்க நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி இருப்பதாகவும்,

அதனால் தமிழகத்திற்கு விரைவில் 2750 கோடி ரூபாய் அமெரிக்க முதலீடு வரப் போகிறதென்றும் செய்தி வந்திருக்கிறார்.இது ஒரு தொகையா,அரை பில்லியன் கூட இல்லை என்று சொல்ல வில்லை.நீங்களும் உங்கள் பரிவாரமும் செய்த செலவுகளுக்கு வவுச்சர் கூட கேட்கவில்லை. ஆனால், வெளிநாட்டவர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் திட்டத்துக்கு 'யாதும் ஊரே'னு பேரு வைக்கலாமா.

அந்த ராமாயணத்தை எழுதிய சேக்கிழாரால் பட்ட அடி போதாதா. நீங்க என்ன கருணா நிதியா?.எடப்பாடியாரே 'யாதும் ஊரே'ன்னா எல்லா ஊரும் ஒன்னுதான்னு அர்த்தம்.அமெரிக்காவுல போயி எல்லா ஊரும் ஒன்னுதான்னு சொல்லலாமா. அவன் நம்ம எடப்பாடியே சொல்லிட்டாரு, எல்லா ஊரும் ஒன்னுதானேன்னு ஆப்பிரிக்காவுக்கோ,அர்ஜென்டினாவுக்கோ போய்ட்டான்னா?

நீங்க என்ன சொல்லியிருக்கனும்?. காஷ்மீர் பிரட்சினை பத்தி பேசுன்னா,உங்க எம்பி பார்லிமெண்ட்டுல ' காஷ்மீர் பியூடிஃபுல் காஷ்மீர்' அப்படினு பாடுனாரே அவர் ஸ்டைல்ல,' சொர்க்கமே என்றாலும்,நம்மூரப் போலாகுமா'ன்னுல்ல பேர் வச்சிருக்கனும்.

நம்க்கெதுக்கு சங்க இலக்கியமெல்லாம்?.யானை புகுந்த வயல் கவித சொல்லிட்டு அந்தம்மா நிர்மலா படற பாட்ட பாக்கறீங்கள்ள?.