எதிர்வீடு அழிந்து போய்விடும்! வயிறு எரிந்து சாபம் விட்ட பெண்மணி! உடனே ஏற்பட்ட துர்மரணம்! சென்னை பரபரப்பு!

சென்னை: எதிர் வீட்டுப் பெண் சாபம் கொடுத்ததால் இளைஞர் ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறி வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராணி. இவர் தனது அன்றாட பிழைப்பிற்காக, வீட்டின் முன்பு தள்ளுவண்டி உணவுக் கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடை நடத்துவதற்கு எதிர் வீட்டில் வசிக்கும் இளையகணேசன் என்பவர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இதனால், அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுவது வாடிக்கையாக இருந்துள்ளது. இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றதால், ராணி கடை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வயிற்றெரிச்சலில் இளையகணேசன் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் அழிந்துவிடுவார்கள், என ராணி சாபம் விட்டதாகக் கூறப்படுகிறது. 

இதற்கடுத்த சில நாட்களில், இளையகணேசனின் மகன் சதீஷ் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதற்கு ராணி விட்ட சாபம்தான் காரணம் எனக் கூறி, இளையகணேசன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து ராணியின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதன்பேரில் ராணி போலீசில் புகார் செய்தார். உடனடியாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.  மேலும், 10 பேரை தேடிவருகின்றனர். எதிர் வீட்டுச் சண்டை இப்படி பரம்பரை பகையாக மாறியது பற்றி பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.