துபாய்: பணத்தை ரோட்டில் அள்ளி வீசியபடி சென்ற நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நடுரோட்டில் திடீரென கத்தை கத்தையாக பணத்தை வீசிய இளைஞர்! திடீரென பெய்த பணமழை! பரபரப்பு காரணம்!

துபாய் தெரு ஒன்றில், 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், துபாயின் அதிகாரப்பூர்வ கரன்சியான திர்கானை கட்டுக்கட்டாக கையில் வைத்தபடி, அதனை அள்ளி தெருவில் வீசியுள்ளார்.
இதனை அவரே வீடியோவாக எடுத்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் உள்ளார்.
அந்நாட்டின் சட்டப்படி, பணத்தை தெருவில் வீசுவது தண்டனைக்குரிய விசயமாகும்.
இதன்படி, இந்த வீடியோவை பார்வையிட்ட துபாய் சைபர் கிரைம் அதிகாரிகள், இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்து, குறிப்பிட்ட நபரை கைது செய்தனர்.
அந்த நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும், பிழைக்க வந்த இடத்தில் இத்தகைய சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.