16 வயதில் மகள் எடுத்த விபரீத முடிவு! வெளிநாட்டில் இருந்து வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் மது ஸ்ரீ இவர் பத்தாம் வகுப்பை முடித்து விட்டு இடைநிலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.


இவர் கல்லூரிக்கு சென்று வருவதை கண்காணித்த அகில் ராஜேஷ் என்ற மாணவன் அவர் மீது காதல் வயப்பட்டு தன்னையும் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி பெற்றோரிடம் கூற அகில் ராஜேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால்  அச்சிறுவனுக்கு பதினெட்டு வயது பூர்த்தியாகாத காரணத்தினால் புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கண்டித்து புத்திமதி கூறி காவல்துறையினர் அச்சிறுவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மீண்டும் இப்பிரச்சனையை தொடரக் கூடாது என்று நினைத்த  பெற்றோர்கள் மாணவியை அவரது பாட்டி வீட்டில் தங்க வைத்தனர். இந்நிலையில் போலீஸ் எச்சரிக்கை விடுத்ததையும் மீறி மீண்டும் மாணவிக்கு சிறுவன் தொந்தரவு அளித்துள்ளான்.

இதனால் மனமுடைந்த மாணவி அவரது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து  அரபு நாட்டில் பணிபுரிந்து வரும் அவரது தந்தைக்கு தகவல்  அளிக்கப்பட்டதை அடுத்து விரைந்து சொந்த ஊருக்கு வந்த அவர் மகளை சடலமாக கண்டதும் செய்வதறியாது கதறி அழுதார்.

இதையறிந்து தலைமறைவான அகில் ராஜேசை வழக்கு பதிவு செய்த ஆந்திரா காவல்துறையினர் தேடி வருகின்றனர்.