நண்பர்கள் 3 பேரின் மர்ம உறுப்பை கொத்தாக அறுத்து வீசிய இளைஞன்..! வீட்டுக்கு வந்து மனைவியை கேட்டதால் விபரீதம்!

டேராடூன்: ஆத்திரத்தில் நண்பர்களையே கொன்று அவர்களின் பிறப்புறுப்பை அறுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நேபாளத்தைச் சேர்ந்தவர் டான் பகதூர் போரா (32 வயது). இவர், டேராடூனில் தனது நண்பர்கள் முன்ஷியாரி, காஷி போரா, ஹரிஷ் போரா உள்ளிட்டோருடன் சேர்ந்து கூலி வேலை செய்து வந்திருக்கிறார். இதில், முன்ஷியாரி டேராடூனில் வாடகை வீடு பிடித்து வசிக்கிறார். கடந்த அக்டோபர் 25ம் தேதி முன்ஷியாரியின் வாடகை வீட்டில் நண்பர்கள் அனைவரும் மது விருந்து கொண்டாடியுள்ளனர். இதன்போது, போதை தலைக்கேறியதும், ஹரிஷ்க்கும், டான் பகதூருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  

டான் பகதூரின் மனைவி சமீபத்தில்தான் கருத்து வேறுபாடு காரணமாக, நேபாளத்தில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். அவரது மனைவி ஹரிஷ்க்கு உறவினர் என்று கூறப்படுகிறது. இதனைக் குறிப்பிட்டு, ''மனைவியுடன் வாழ தெரியாத நாயே,'' எனக் கூறிய ஹரிஷ், படிப்படியாக போதையில் கெட்ட வார்த்தைகளைச் சொல்லி டான் பகதூரை திட்டியுள்ளார். நேரம் செல்லச் செல்ல இந்த கெட்ட வார்த்தைகளை கேட்டு கேட்டு, டான் பகதூர் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

உடனடியாக, வீட்டின் வெளியே கிடந்த கல்லை எடுத்து ஹரிஷ் தலையில் போட்டு டான் பகதூர் கொன்றுவிட்டார். தடுக்க வந்த காஷி, முன்ஷியாரி ஆகியோரையும் இதேபோல கொன்றுவிட்டார். பிறகு, அவர்களின் பிறப்புறுப்பை அறுத்து தனியாக ஒரு பையில் மூட்டை கட்டி எடுத்துச் சென்றுள்ளார். அடுத்த நாள் காலையில் போதை தெளிந்ததும், செய்த தவறை உணர்ந்து, உடனடியாக, உள்ளூர் போலீசில் டான் பகதூர் சரணடைந்தார். அவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.