புர்கா அணிந்து வந்து கள்ள ஓட்டு போட முயற்சியா? பேஸ்புக்கில் பரவும் போட்டோக்களால் பரபரப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம், முசாஃபர்நகரி, சதாம் என்ற இளைஞர், முஸ்லீம் பெண் போல பர்தா அணிந்து கள்ள ஓட்டுப் போட முயன்றார் என்றும், அப்போது பிடிபட்டார் என்றும், அந்த புகைப்படங்கள் பற்றி கேப்ஷன் பகிரப்பட்டு வருகிறது.


 இது ஃபேஸ்புக் கடந்து, ட்விட்டரிலும் பரவி வருவதால், இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க நேரிட்டது. இதன்படி, குறிப்பிட்ட புகைப்படத்தை, கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இது 2015ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனத் தெரியவந்தது. இதுதொடர்பான செய்தியும் அதில் கிடைத்தது.

அந்த செய்தியை படித்து பார்த்தால், புகைப்படத்தில் இருக்கும் நபர் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என தெரியவருகிறது. அவர், 2015ம் ஆண்டு ஆசம்கார் பகுதியில் உள்ள கோயில் ஒன்றின் மீது முஸ்லீம் பெண் போல வேடமணிந்து வந்து, மாட்டிறைச்சியை வீச முயன்றபோது, போலீசாரிடம் பிடிபட்டுள்ளான்.

இந்த செய்தியை, தவறாக சித்தரித்து, தற்போது மதவெறி மற்றும் தேர்தல் பிரசாரத்திற்காக, பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இந்த பதிவு மற்றும் புகைப்படங்கள் உங்களுக்கு வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் வழியாக கிடைத்தால், பகிர வேண்டாம் எனவும், கவனமாக இருக்கும்படியும் நமது வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம்...