பெண் டாக்டரின் வலியை நானும் உணர வேண்டும்! ஒட்டு மொத்த நாட்டையை திரும்பி பார்க்க வைத்த இளம் பெண்! நெகிழ்ச்சி காரணம்!

பிரியங்கா ரெட்டி கற்பழித்து எரித்து கொலை செய்யப்பட்டபோது, உணர்ந்த வலியை நானும் உணர வேண்டும் என இளம்பெண் ஒருவர் தனது கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டு நாள் முழுக்க நின்ற வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஐதராபாத்தில் கடந்த வாரம் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி இரவு வீடு திரும்பும் பொழுது நான்கு பேரால் கற்பழித்து எரித்துக் கொலை செய்யப்பட்டார்.  

இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே நிலைகுலையச் செய்தது. அதன் பிறகு, கொடூர சம்பவத்தை செய்த நால்வரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் யானா மிர்சாந்தினி என்ற இளம் பெண் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

அதில், பிரியங்கா ரெட்டி இறக்கும்பொழுது, உடல்முழுவதும் அனுபவித்த வலியை சிறிதளவாவது நானும் உணர வேண்டும். அப்போது தான் நாம் அனுபவிக்கும் வலி நாட்டு மற்றவர்களுக்கு புரியும் என குறிப்பிட்டு, தனது கையில் மெழுகுவர்த்தியை ஏந்திக்கொண்டு அதற்கான வீடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார்.  

தற்போது, இந்த சமர்ப்பண வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.