வேகமாக வயதுக்கு வரும் சிறுமிகள்! இளம் பெண்களான பிறகு எதிர்கொள்ளும் அந்த பிரச்சனைகள்!

இள வயதிலேயே பூபெய்தி விடும் சிறுமிகளுக்கு மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலிக்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.


தலைவலி தொடர்பான அமெரிக்க ஆய்வு நிறுவனம் பள்ளி மாணவ மாணவியர் இடையே ஒற்றைத் தலைவலி தொடர்பான ஆய்வை நடத்தியது. ஒற்றைத் தலைவலிக்கான வாய்ப்புகள் மாணவர்கள் 100 பேரில் 8 பேருக்கு மட்டுமே இருந்த நிலையில் மாணவிகளில் 23 பேருக்கு இருந்தது தெரிய வந்தது. 

அவர்களிலும் இளமையிலேயே பூப்பெய்தும் சிறுமிகளுக்கே ஒற்றைத் தலைவலி வாய்ப்புகள் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. சிறுமிகளுக்கு மாத விலக்கு, மார்பக வளர்ச்சி, அந்தரங்க ரோம வளர்ச்சி உள்ளிட்ட தருணங்களில் மைக்ரேன் தலைவலி ஏற்படுவது தெரியவந்துள்ளது 

சிறுமிகளுக்கு சராசரியாக 16 வயதில் மைக்ரேன் தலைவலி ஏற்படுவது அவர்கள் சிறுமிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 85 சிறுமிகளுக்கு மைக்ரேன் தலைவலி இருந்ததும் 53 பேருக்கு அது வருவதற்கான அறிகுறிகள் இருந்ததும் தெரிய வந்தது. அவர்கள் இள வயதிலேயே பூப்பெய்தியதும் தெரியவந்தது 

அதன் பிறகு ஒவ்வொரு கட்ட மார்பக வளர்ச்சி, மற்றும் மாத விலக்கு வளர்ச்சி, ரோம வளர்ச்சி உள்ளிட்டவற்றின் போதும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.