இளம்பெண் சொன்ன ஒரே வார்த்தை! லட்சம் லட்சமாக பணத்தை காலடியில் கொட்டிய இளைஞர்கள்! பிறகு நிகழ்ந்த பரிதாபம்!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களிடம் பணம் பறித்து மோசடி செய்த புகாரில் இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.


சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கிவரும் ஈ-ஜாப்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஆவடியை சேர்ந்த இளம்பெண் அருணா ஹன்சிகா இளைஞர்களிடம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்

வெளிநாடு செல்ல இணையதளத்தில் தேடும் இளைஞர்களை குறிவைத்து அவர்களின் பட்டியலை எடுத்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குறைந்த செலவில் விசா வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் வாங்குவது இந்த அருணாவின் வேலை. 

நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித் தராததால், பணம் கொடுத்தவர்கள் இந்த நிறுவனத்தை தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்தும் எவ்வித பலன் அளிக்கவில்லை. ஆதலால் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தை நேரில் வந்து பார்த்துள்ளனர். அங்கு அலுவலகத்தை பூட்டி விட்டு அருணாவும் நிறுவனத்தின் உரிமையாளரும் தப்பிச் சென்றுவிட்டனர். 

இதனையடுத்து பணம் கொடுத்து ஏமாந்த இளைஞர்கள் அருகிலுள்ள ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆவடியை சேர்ந்த அருணா கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நிறுவனத்தின் உரிமையாளர் நிருபன் சக்கரவர்த்தி தப்பி ஓடிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கருணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி முத்திரைகள் கொண்டு பணி ஆணை மற்றும் விசா ஆகியவற்றை இந்நிறுவனம் தயாரித்திருப்பது ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது.