தேவாலயத்திற்குள் வைத்து தொடக்கூடாத இடத்தில்..! கராத்தே டீச்சர், பாதிரியார் மீது பகீர் புகார்! ஊட்டி பரபரப்பு!

கூடலுர்: கராத்தே ஆசிரியர் மீது புகார் சொன்ன சிறுமியை அவரது தந்தை உள்ளிட்டோர் தாக்கிய கொடுமை நிகழ்ந்துள்ளது.


ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருபவர் ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயது சிறுமியான இவரது குடும்பம், விமலகிரி பகுதியில் உள்ள செயின்ட் மேரிஸ் சர்ச் நிர்வாகத்தின் ஊழியத்திற்கு கட்டுப்பட்டவர்கள் ஆவர். இந்நிலையில், அந்த சர்ச் நிர்வாகம் சார்பாக, இளம் பெண்கள், சிறுமிகளுக்கு கராத்தே பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ரியாவும் பங்கேற்று பயிற்சி பெற்றுள்ளார். அப்போது, அவரிடம் கராத்தே மாஸ்டர் பாலியல் சில்மிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி சர்ச் ஃபாதரிடம் ரியா புகார் செய்துள்ளார். ஆனால், அவர் எதையும் வெளியில் சொல்லாதே, எனக் கூறிவிட்டாராம்.  

இதையடுத்து, ரியாவும், அவரது தாய் லில்லியும் சேர்ந்து கூடலுர் போலீசில் புகார் அளித்தனர். இந்த விவரம் உள்ளூர் மக்களுக்கு தெரியவந்த நிலையில், திடீரென ரியா வீட்டை, சர்ச் ஊழியர்கள் உள்பட ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு, தாக்கியது. லில்லி, ரியா இருவரையும் அடித்து உதைத்துவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. கொடுமை என்னவெனில், இந்த கும்பலில் ரியாவை பெற்ற தந்தையும் ஒருவராக இருந்து, சர்ச் நிர்வாகத்தை காப்பாற்றுவதற்காக, தனது மனைவி, மகளை அடித்து உதைத்ததோடு, வீட்டையும் தாக்கியுள்ளார். இதுபற்றி போலீஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

குறிப்பிட்ட கராத்தே மாஸ்டர் ரியா படித்து வந்த பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். ரியாவுக்கு, பள்ளியிலும், சர்ச்சிலும் மாறி மாறி அவர் பாலியல் தொல்லை அளித்ததால், ரியா, பள்ளிக்கூடம் செல்வதையே நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.