இளம் பெண் இயக்குனர் மர்ம மரணம்! வீட்டில் சடலமாக கிடந்தார்!

இளம் பெண் இயக்குனர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


2017ம் ஆண்டு வெளியான கிராஸ்வேர்ட் எனும் திரைப்படம் மூலம் மலையாள திரையுலகில் பிரபலம் ஆனவர் நயனா. இவர் பல்வேறு பிரபல இயக்குனர்களுக்கு உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

தமிழில் கமல் நடிப்பில் உருவான பாபநாசம் படத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடமும் நயனா உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இறுதியாக இயக்குனர் லெனினிடம் நயனா நீண்ட நாட்களாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில்அண்மையில் லெனின் காலமானார். இதனை தொடர்ந்து நயனா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நயனாவின் செல்போனுக்கு பல முறை அவரது தாயார் அழைத்துள்ளார்.

ஆனால் நயனா தொலைபேசியை எடுக்கவில்லை. இதனால் நயனாவின் நண்பர்களிடம் அவரது தாய் தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து நயனாவின் வீட்டிற்கு அவரது நண்பர்கள் சென்றுள்ளனர்.

அப்போது வீட்டில் நயனா உயிரிழந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து சென்ற போலீசார் நயனாவின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

சர்க்கரை நோயால் நயனா அவதிப்பட்டு வந்ததாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். இதே போல் இயக்குனர் லெனின் மறைவுக்கு பிறகு நயனாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும் பிரேதப்பரிசோதனை அறிக்கைக்கு பிறகே நயனாவின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.