பொள்ளாச்சி வீடியோ விவகாரம்! நீதி கேட்டு நிர்வாண போராட்டம்! களமிறங்கும் பெண் பிரபலம்!

பொள்ளாச்சி பெண்களுக்கு நீதி கேட்டு பெண்கள் அனைவரும் இணைந்து நிர்வாண போராட்டம் நடத்த வேண்டும் என்று எழுத்தாளர் நிர்மலா கொற்றவை கேட்டுக் கொண்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.


பொள்ளாச்சியில் இளம்பெண்கள் துடிக்கத் துடிக்க சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து பெண்களை கதற கதற நிர்வாணமாக வீடியோ எடுத்து கும்பல் மிரட்டி உள்ளது.

இந்த விவகாரத்தில் பெண்களுக்கு நீதி கேட்டும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்து கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் சாலை மறியலும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி விவகாரம் குறித்து பிரபல எழுத்தாளரும் பெண்ணுரிமைக்குக் போராளியுமான கொற்றவையிடம் பிரபல வார இதழ் ஒன்று பேட்டி எடுத்துள்ளது.

அதில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பெண்கள் தற்போது நடத்தும் போராட்டம் போதுமானதாக இல்லை என்று நிர்மலா கொற்றவை கூறியுள்ளார். தற்போது வரை பெண்களின் நிர்வாணத்தை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் கூட ஆபாசமாக தான் கருதுகின்றனர்.

நிர்வாணம் என்பது ஆபாசம் இல்லை அதை பார்க்கும் மனதில்தான் இருக்கிறது என்பதை தெரியப்படுத்தும் வகையில் பெண்கள் அனைவரும் நிர்வாணமாக கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த வேண்டும் என்று கொற்றவை கேட்டுக் கொண்டுள்ளார்.

நிர்வாணமாக கோட்டையை முற்றுகையிட செல்லும்போது போலீசாரால் எதுவும் செய்ய முடியாது இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றும் நிர்மலா கொற்றவை கூறியுள்ளார்.