அடேங்கப்பா, சுந்தர் பிச்சைக்கு சம்பளம் இவ்வளவு ரூபாயா..?

கூகுள் கம்பெனி தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சையோட போன வருச வருமானம் 280.60 மில்லியன் டாலர் என்று மூத்த பத்திரிகையாளர் கதிர்வேல் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.


அமெரிக்கன் டாலர இந்திய ரூபாய்க்கு மாத்தி பாக்கும்போதுதான் நம்மாளுகளுக்கு உண்மையான மதிப்பு புரியும். அப்படி கணக்கு போட்டா, 2019 ல சுந்தர் வருமானம் 2,052 கோடி ரூபா. ஒண்ணு ரெண்டு கோடி கூட குறையா இருக்கலாம், விட்டு தள்ளுங்க.

கூகுள் மட்டும் இல்லாம, அதோட பேரன்ட் கம்பெனினு சொல்ற ஆல்ஃபபெட் தாய் கழகத்துக்கும் நம்ம தமிழன் சுந்தர்தான் சி.இ.ஓ.வா இருக்கார். ஆக்சுவலா பாத்தா சம்பளம்னு அவருக்கு இந்த ரெண்டு கம்பெனில இருந்தும் வர்றது ஜஸ்ட் 4 மில்லியன் டாலர். 15 கோடி ரூபாய்க்கும் கம்மி. மீதி எல்லாம் கம்பெனியோட பங்குகள் மூலமா கிடைக்கிறது.

கார்ப்பரேட் கம்பெனிகள்ல சம்பளத்தோட ஒரு பகுதியா ஷேர்கள் குடுக்றது வழக்கம். அப்டி போன வருசத்ல சுந்தருக்கு தரப்பட்ட ஷேர்களோட மதிப்பு 276.60 மில்லியன் டாலர். 

ஷேர்கள் வழியா மட்டும் பத்து வருசத்துல 1 பில்லியன் டாலர் சம்பாதிச்சு இருக்கார் சுந்தர். ரூபாய்ல 7,313 கோடி. ஆப்பிள் கம்பெனியோட சி.இ.ஓ டிம் குக் வருமானமும் கிட்டத்தட்ட இதே அளவுதான். சுந்தருக்கு 48 வயசு ஆவுது. குக் அடுத்த மாசம் 60 ஐ தொடுவார். ஸோ, சுந்தர் அந்த வயச எட்டும்போது இன்னும் எங்கயோ போயிருப்பார். இப்போதைக்கு சுந்தரோட சொத்து மதிப்பு 50,000 கோடிக்கு கொஞ்சம் கீழ இருக்கு என்று கூறி அதிர வைத்துள்ளார்.