அரசு வேலை தான் முக்கியம்! மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த கவுசல்யா!

ஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கவுசல்யாவை தெரிந்திருக்கும்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சங்கர் படுகொலை செய்யப்பட்டதும் சமூகப் போராளியாக மாறினார். இவருக்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் அரசு வேலை கொடுக்கப்பட்டது. பறை இசைக்குழு நடத்தி வரும் சக்தி என்பவரை கவுசல்யா மறுமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் அவர் மத்திய, மாநில் அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து பதிவுகள் போட்டுவந்த காரணத்தால், அந்த வேலையில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார். அப்போதும், எனக்கு வேலை முக்கியம் இல்லை, இந்த சமுதாயத்திற்காக போராடுவதுதான் முக்கியம் என்று குரல் கொடுத்தார்.

ஆனால், இடையில் என்ன நடந்த்தோ, இப்போது டோட்டல் சரண்டர். ஆம், இனிமேல் இந்திய இறையாண்மைக்கு எதிராக எதுவும் பேச மாட்டேன் என்று மன்னிப்புக் கடிதம் கொடுத்து வேலையில் சேர்ந்துவிட்டார். 

தினமும் காலையும் மாலையும் தேசிய கீதம் பாட வேண்டும், அரசுகளுக்கு எதிராக எந்த ஒரு பதிவு போடுவதும், பேசுவதும் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இவர் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு வேலையில் சேர்ந்துவிட்டார். 

அதனால், சமூகத்திற்கு ஒரு போராளி குறைந்துவிட்டார். இருந்தாலும், ஏராளமான தொந்தரவுகளுடன் வாழ்ந்துவந்த கௌசல்யா, இனியாவது அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்க்கை நடத்தட்டும்.