தண்ணீர் கேன் போட்டு தனது அன்றாட வாழ்வை ஓட்டி வந்த இளம் பெண்ணின் கணவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொழில் போட்டியால் ஏற்பட்ட பரிதாபம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி.
தண்ணி கேன் போட்டு கூட பிழைக்க விடமாட்றாங்க! கைக்குழந்தையுடன் கதறிய இளம் பெண்! கணவனோ சிறையில்! பதற வைக்கும் சம்பவம்!

இது தொடர்பாக சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் என்பவர் சென்னை மவுண்ட் பகுதி காவல் ஆய்வாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,பெரும்பாக்கம் 8 மாடி குடியிருப்பு பகுதியில் சிந்தாதிரிப்பேட்டை பகுதியிலிருந்து குடியமர்த்தப்பட்ட 56 /2 வது பிளாக்கில் வசிக்கும் ராஜேஷ்
ம/பெ வினோதினி குடும்பத்தோடு வசித்து வருகின்றார். இந்நிலையில் அதே பிளாக்கில் வசிக்கும் பிரசாந்த் என்பவர் 8 வீடுகலுக்கு மேல் சொந்தமாக வைத்துள்ளார் இரண்டு கார் வைத்துள்ளார் டாடா ஏஸ் இரண்டு வைத்துள்ளார் மற்றும் மளிகைக்கடை, மற்றும் ஜெராக்ஸ்கடை, ஸ்டுடியோகடை , வீடு வீடாக அரிசி மூட்டை மற்றும் தண்ணீர் கேன் போடுவது மற்றும் வட்டிக்கு பைனான்ஸ் கொடுப்பது மற்றும் வாங்குவது என்று பல விதங்களில் வருமானம் பார்த்து வந்துள்ளார்.
ராஜேஷ் குடும்பத்தினர் வேலைவாய்ப்பு இல்லாமல் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் மற்றும் தாய், தகப்பனார் மற்றும் வயதான பாட்டியை வைத்துக்கொண்டு தினம் தினம் சாப்பாட்டிற்கே அல்லல் பட்டு அவதியுறும் சூழ்நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். ராஜேஷ் எவ்வித பொருளாதார வசதியும் இல்லாத நிலையில் வேறு வழியின்றி குறைந்த முதலீட்டில் ஒரு நாளைக்கு மொத்தம் 10 தண்ணீர் கேன் விலைக்கு வாங்குவார். அதில் ஒரு கேன் 15 ரூபாய் என்று வாங்கி 30 ரூபாய்க்கு வீடு வீடாகச் சென்று போட்டு அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்ப ஜீவனம் நடத்தி வந்துள்ளார் ராஜேஷ்.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத மேற்கண்ட பிரசாந்த் என்பவர் பல விதங்களிலும் பல்வேறு வருமானத்தை பார்த்து வந்த போதும் ஏழை ராஜேஷ் என்பவரை கூப்பிட்டு இனிமேல் தண்ணீர் கேன் நீ போடக்கூடாது என்று தடை பன்னியுள்ளார். இவர் யார் நம்மை கேட்பது என்று மீண்டும் தண்ணீர் கேன் போட்டு வந்துள்ளார்.
இதில் ஆத்திரமுற்ற பிரசாந்த் சண்டை போடுகிறார்... இதில் ராஜேஷ் தகப்பனாரின் கையில் தடியால் அடித்து கையை உடைத்து விட்டு (கை எலும்பு இரண்டாக உடைந்து விட்டது) நியாயம் கேட்ட நிறைமாத கர்பினி ராஜேஷின் மனைவி வினோதினியின் கையையும் உடைத்து தாக்கி விடுகிறார் பிரசாந்த். இதில் வினோதினி திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நலம் கோசா மருத்துவமனையில் 15 நாட்களும் ராஜேசின் தகப்பனார் மதிவாணன் உடைந்த கையில் இரும்பு பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்ய ஒரு மாத காலம் அரசு இராயப்பேட்டை மருத்துவமனையிலும் என்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இவ்வளவு பாதிப்புக்குள்ளான என்பவரை கைது செய்து தற்போது புழல் சிறையில் அடைத்து இன்ரோடு 15 நாட்களுக்கு மேலாகி இருக்கிறது வக்கில் வச்சி வெளியில் எடுக்க எங்களிடம் பணம் இல்லை ஒரு வக்கில் எங்களுக்கு இலவசமாக உதவுவதாக சொல்லி இதுவரை எங்க வீட்டுக்காரரை 15 நாட்கலாக வெளியில் எடுக்கவில்லை.
ஆதலால் எங்கள் பகுதி குழந்தைகள் படிப்புக்கு மற்றும் பள்ளிக்கு சென்று வர பஸ் வசதி போன்ற ஏனைய உதவிகள் எல்லாம் எங்கள் பகுதியில் நீங்கள் செய்வதாக இங்கு எல்லோரும் சொல்லி உங்களை போய் பார்க்க சொன்னார்கள்.
தயவு செய்து எங்களுக்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் எங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை எங்களிடம் வசதியும் இல்லை எங்க வீட்டுக்காரர் இல்லாமல் எங்களுக்கு வருமானத்திற்கு வழியின்றி நாங்கலும் பசி பட்டினியால் வாடுகிரோம் கடவுள் மாதிரி நீங்கள் தான் உதவிட வேண்டும் என்று அன்னை இரவுப் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சமூக ஆர்வலர் சு.இராமச்சந்திரன் அவர்களிடம் கேட்டார் வினோதினி.
அப்படி நீங்களும் எங்களுக்கு உதவவில்லை என்றால் மூன்று குழந்தைகள் மற்றும் நானும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்ணீர் விட்டு அந்த பெண் கலங்கியது கல் மனதையும் கரைந்திடச் செய்தது. அந்த நேரத்தில் கையில் இருந்த ரூ 500 யை கொடுத்து சாப்பாட்டு செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் பிறகு நான் வருகிறேன். என்று கூறிவிட்டு வந்துள்ளேன்.
அய்யா இதற்கு சட்டப்பூர்வமாகவும் மனிதனேய அடிப்படையிலும் தாங்கள் கருணை கொண்டு உதவிடுங்கள். அய்யா தாங்கள் அந்தப் பெண்ணை அழைத்து வரச் சொன்னாலும் இன்று 13.09.2019 அழைத்து வருகிறேன். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் பலரும் ராஜேசுக்கு சட்ட உதவி செய்து அவரை வெளியே எடுத்துள்ளனர். அதே போல் தண்ணீர் கேன் போடும் பிரச்சனைக்கும் தீர்வு எட்டப்பட்டுள்ளது.