கள்ளக் காதலனுக்காக திருமணமான 4 நாளில் கணவன் கொலை! கண்டுபிடித்த அண்ணன் தங்கைக்கு கொடுத்த தரமான தண்டனை!

திருமணமாகி 4 நாட்களில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற புதுமணப்பெண்ணை சுட்டுக் கொன்ற சகோதரனை போலீசார் கைது செய்துள்ளனர்.


முசாஃபர் நகர் மாவட்டம் ஜலால்பூர் கிராமத்தில் திருமணமாகி 4 நாட்களில் ஷிவானி என்ற புதுமணப் பெண்ணைக் கொன்றதாக அளிக்கப்பட்ட புகாரில் பெண்ணின் சகோதரன் சுமீத் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஷிவானியை வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வயல் வெளிக்கு அழைத்துச் சென்று நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். 

அதன் பிறகு அவர் வெளியிட்ட தகவல்கல் அதிர்ச்சிக்குரியவையாக இருந்தன. ஷிவானி திருமணம் செய்து வந்த பிறகு அவரது கணவர் ஷைலேந்திராவுக்கு உறவுக்கார பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதை தெரிந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஷிவானி அதே ஊரைச் சேர்ந்த தனது உறவினருடன் தவறான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அனுஷ் என்ற நபருடன் திருமணமான மறுநாளே கள்ளக் காதலை ஏற்படுத்திக் கொண்டு உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த தவறான தொடர்பு குறித்து ஷிவானியின் கணவன் ஷைலேந்திராவுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஷைலேந்திரா மனைவியை கண்டித்துள்ளார். அப்போது ஷிவானி நீ மட்டும் இன்னொருவனுடன் உறவு வைத்திருக்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஷிவானி தனது கள்ளக் காதலன் அனுஜூடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 4-ஆம் தேதி ஷிவானியின் வழிகாட்டுதலின் படி அனுஜ் ஷைலேந்திராவை சுட்டுக் கொன்றதோடு, அவரது தம்பியான மணீஷ் என்பவரை காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றான்.

இந்த தகவல் அறிந்த ஷிவாணியின் சகோதரர் சுமீத் குமார் கோபம் வந்து குடும்ப மானத்தைக் காற்றில் பறக்க விட்ட ஷிவானி மீது ஆத்திரம் ஏற்பட்டதால் அவரை சுட்டுக் கொன்றுள்ளார்.  இதனைத் தொடர்ந்து ஷிவானியின் கள்ளக் காதலன் அனுஜ்ஜையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.