மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு வந்து கொண்டிருந்த ரயிலில் அப்பர் பெர்த்தில் இருந்து இறங்க முயன்று தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
ரயிலின் அப்பர் பெர்த்தில் இருந்து தவறி விழுந்த பெண்! தூக்கத்திலேயே உயிர் போன பரிதாபம்! இப்படியுமா சாவு வரும்?

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சரஸ்வதி பனிசால். பெங்களூருவில் வேலை பார்த்து வந்த இவர் பணி நிமித்தமாக மும்பைக்கு சென்று விட்டு உத்யான் விரைவு ரயிலில் ஏசி பெட்டியில் பெங்களூருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் 40 வயதான சரஸ்வதிக்கு அப்பர் பர்த் தான் கிடைத்தது.
சற்று பருமனான சரஸ்வதி பெங்களூரில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ரயில் நுழைந்தபோது பெர்த்தில் இருந்து கீழே இறங்க முயற்சித்ததாகவும் அப்போது அவர் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சக பயணிகள் ரயில் நிலைய நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து மருத்துவ குழுவினர் வந்தனர்.
மருத்துவர்களின் கேள்விகளுக்கு தொடக்கத்தில் சரஸ்வதி இயல்பாகவே பதிலளித்தார். பரிசோதனையில் அவரது உடல் நிலையும் இயல்பாகவே இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் கொண்டு செல்லும் வழியிலும் அவர் மருத்துவரின் கேள்விகளுக்கு இயல்பாகவே பதில் அளித்ததாகவும் உடன் வந்த போலீசாரிடம் தான் கொண்டு வந்த பொருட்களில் சற்று விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாகவும் அதனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவமனையை நெருங்கியபோது அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது கேட்ட கேள்விகளுக்கு கவனமின்மையாகவும், பிறகு பதில் அளிக்காமலும் இருந்தார் சிறிது நேரத்தில் அவர் நினைவிழந்த நிலையில் அவரை அவசரமாக பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவரிடம் இருந்து முற்றிலுமாக எந்த அசைவும் இல்லாமல் இருந்தது இதையடுத்து அவர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் இழந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சரஸ்வதிக்கு உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் உள்ளிட்ட ஏதேனும் பாதிப்புகள் இருந்ததா என தெரியவில்லை என்றும், உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடலில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட ஏதும் பாதிப்பு இருந்தால் அப்பர் பரத்தை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்