டாக்டர்கள் முன்னிலையில் பெண்ணின் வாய் வெடித்துச் சிதறியது! ஆப்பரேசன் தியேட்டரில் பயங்கரம்!

சிகிச்சையின்போது திடீரென வாய் வெடித்து, பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜே.என்.மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு, விஷம் குடித்து உயிருக்குப் போராடி வந்த பெண் ஒருவரை அனுமதித்தனர். புதன்கிழமை மாலை அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணின் வாய் வழியாக, குழாய் சொருகி,  அதில் இருந்து விஷத்தை உறிஞ்சி எடுக்க, டாக்டர்கள் நடவடிக்கை எடுத்தனர். 

சிசிடிவி கேமிரா முன்னிலையில், இந்த சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால், திடீரென அந்த பெண்ணின் வாயில் இருந்து பயங்கர சப்தம் வந்தது. அதாவது அந்த பெண்ணின் வாய் வெடித்து, அவர் உயிரிழந்தார். இதனால், டாக்டர்கள் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உயிரிழந்த பெண்ணை நன்றாக பரிசோதித்தபோது, அவர் சல்பியூரிக் அமிலத்தை குடித்திருக்கலாம் என்றும், இந்த அமிலம் குழாய் வழியாக, வெளியில் உறிஞ்சப்படும்போது, ஆக்சிஜன் கலந்து, வேதியியல் மாற்றம் காரணமாக வெடித்திருக்கலாம் என்றும், தெரியவந்தது.