யார் கூடடி பேசிகிட்டு இருக்க? நடுரோட்டில் ஓங்கி அறைந்த ஆண் நண்பன்! சுருண்டு விழுந்து பலியான பெண் தோழி!

மும்பை: ஆண் நண்பர் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை மான்கர்ட் ரயில்வே நிலையம் அருகே வசித்து வந்தவர் சீதா பிரதான். 35 வயதான இவர், வேறு ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்ததை, அவரது ஆண் நண்பர் புஜாரி யெல்லப்பா நேரில் பார்த்துவிட்டாராம். இதன்பேரில் சந்தேகம் கொண்ட புஜாரி, திடீரென சீதாவை ஓங்கி அறைந்துள்ளார்.

அறை பலமாக விழவே சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து, சீதா உயிரிழந்துவிட்டாராம். இதன்பேரில் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டதோடு, புஜாரி யெல்லப்பாவையும் பிடித்து விசாரிக்கின்றனர்.

பிரேத பரிசோதனை முடிவுகள் தெரியவந்த பிறகே இதுபற்றி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று, போலீசார் தெரிவிக்கின்றனர். ஆண் நண்பரின் ஒரே ஒரு அறையில் அவரது பெண் தோழி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.