தற்கொலை செய்து கொள்ளவா? ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தி இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!

இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு நடத்தி இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மலேசியாவைச் சேர்ந்த அந்த இளம்பெண் இன்ஸ்டாகிராமில் L ஆர் D என்று பதிவிட்டு வாக்கெடுப்பு நடத்தினார். எல் என்றால் லைவ், டி என்றால் டெட். ஆதாவது தான் வாழ வேண்டுமா அல்லது மரணிக்க வேண்டுமா என்பதை தேர்வு செய்யுமாறு அந்த இளம்பெண் வாக்கெடுப்பு நடத்தினார். விளையாட்டுக்காக இந்தப் பெண் இதுபோன்று செய்கிறார் என்று நினைத்த பலரும் டி என்பதையே தேர்வு செய்தனர்.

69 வெளிக்காட்டினர் டி என்பதை தேர்வு செய்ததன் விளைவாக அந்தப் பெண்ணின் ஆயுள் முடிந்தது. தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டு உயிரை விட்டார். இதற்கு காரணமாக அந்தப் பெண் கூறியிருப்பது தனது வளர்ப்புத் தந்தை மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது உள்ளிட்ட பல குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவே இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

சமூக வலை தளங்கள் அனைத்தும் மக்களை ஒருங்கிணைத்து நல்ல முடிவுகள் பலவற்றை எடுப்பதற்கு வழிவகுக்க வேண்டும் ஆனால் இதற்கெல்லாம் மாறாக எதிர்மறையான முடிவுகளை மட்டுமே சமூக வலைதளங்கள் ஏற்படுத்துகின்றன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. இனி யாராவது இதுபோல் வாக்கெடுப்பு நடத்தினால் ஓ அல்லது முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபட நினைத்தாலும் சமூக வலைதளங்களில் இருப்பவர்கள் அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும்.