ஓயாமல் உல்லாசத்துக்கு அழைத்த காதலன்! மறுத்த காதலி! பிறகு நேர்ந்த விபரீதம்!

டெல்லி: கணவனை விட்டு ஓடிவந்த பெண்ணை, கள்ளக்காதலன் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியின் நரேலா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவர்தான் இப்படியான  கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். செவ்வாயன்று காலை வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில், அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவருக்கு 2 மகன்கள் உள்ளதும் தெரியவந்தது. 

இந்நிலையில், சில மாதங்கள் முன்பாக, அருண் ஷா என்பவருடன் அந்த பெண்ணிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த அருண் ஷாவுக்கும் திருமணமாகி, 6 குழந்தைகள் உள்ள நிலையில், 2 மாதம் முன்பாக, இருவரும் தங்களது குடும்பத்தினரை விட்டு ஓடிவந்துவிட்டார்களாம். 

டெல்லியின் நரேலா பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கிய அவர்கள், அருகில் உள்ள தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள். ஆனால், அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதன்பேரில், செவ்வாயன்று அருண் ஷா, தனது கள்ளக்காதலி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிவிட்டாராம்.

இதையடுத்து, வழக்குப் பதிந்து போலீசார், அந்த நபரை தேடிவருகின்றனர்.