அத்திவரதர் அருளால விஜயகாந்த் பேசுவாரா? மகன் படத்துக்கும் ஆசிர்வாதம் வாங்கியாச்சு!

விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வந்துகொண்டே இருந்தன.


அதாவது சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. அதனாலோ என்னவோ, தொண்டர்கள், கட்சி நிர்வாகள் யாரையும் விஜயகாந்திடம் அண்டவிடாமல் வைத்திருந்தார்கள். இந்த தருணத்தில் இன்று திடீரென கட்சித் தொண்டர்களுக்கு தரிசனம் தந்தார் விஜயகாந்த்.

 காலை 9.30 மணி அளவில் விஜயகாந்த், பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன், சுதீஷின் மனைவி என குடும்ப சகிதமாக அத்திவரதரை சந்திக்க உள்ளே நுழைந்தனர். அவரை இரு புறமும் கைத்தாங்கலாக உள்ளே அழைத்து சென்றனர். தட்டு தடுமாறி விஜயகாந்த் வந்தாலும், அங்கு குவிந்திருந்த மக்கள் ஆர்வமாக அவரை முண்டியத்து கொண்டு பார்த்தார்கள். அப்போது சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.

மேலும் மகன் சண்முக பாண்டி நடிக்கும் மித்ரன் படத்தின் பூஜையின் ஸ்லைட் அதாவது பெயர்ப்பலகை அத்திவரதர் சன்னதியில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் சாமி கும்பிட்ட விஜயகாந்த் பின்னர் கோயிலை விட்டு கிளம்பி சென்றார். அத்திவரதர் அருளால் அவர் விரைவில் பேச வேண்டும் என்பதுதான் பிரேமலதாவின் பிரார்த்தனையாக இருந்ததாம். கடந்த முறை வெளியே வந்தபோது தனியே நடக்கமுடியாமல் கிட்டத்தட்ட தூக்கிக்கொண்டு வருவதைப் போலவே தள்ளிக்கொண்டு வந்தனர்.

இந்த முறை தட்டுத்தடுமாறி என்றாலும் தானே நடந்து வருகிறார். அதனால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தயாராகி விடுவார் கேப்டன் என்று அவரது கட்சியினர் சந்தோஷப்படுகின்றனர். விஜயகாந்த் நடித்த இரண்டு படங்களும் அவுட் ஆனதால், அத்திவரதரிடம் ஆசி வாங்கி வெளியிட இருக்கிறார்கள். அத்திவரதர்தான் காப்பாத்தணும்.