எம்.பி. பதவியை ராஜினாமா செய்வாரா வைகோ? காங்கிரஸ் டென்ஷனை கண்டுகொள்ளாத ஸ்டாலின்!

செத்த வீட்டுக்குப் போனாலும் கதாநாயகனாக வேண்டும் என்று ஆசைப்படுபவர் வைகோ.


அவரால் எங்கேயும் ஒரு நிமிடமும் அமைதியாக இருக்க முடியாது. அதனால்தானோ என்னவோ, நாடாலுமன்றத்தில் காஷ்மீர் விவகாரத்தில் காச்முச்சென்று காங்கிரஸை கத்தித் தீர்த்துவிட்டார்.

இந்த விவகாரம்தான் இப்போது திமுக கூட்டணியில் கொளுந்துவிட்டு எரிகிறது. தமிழ்நாட்டு காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி கடுமையாக கொந்தளித்தார். உடனே, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால்தான் நான் எம்.பி. ஆனேன் என்று கெத்தாகப் பேசினார்.

உடனே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட முடியாது என்று சொல்லியிருந்தால், வைகோ எம்.பி. ஆகியிருக்க முடியுமா என்று காங்கிரஸ் மீண்டும் கோபமாகியிருக்கிறது. ‘"நாங்கள் போட்ட பிச்சையில் டெல்லி போனவர் எங்களிடமே போட்டு பார்க்கிறார், அவரை சும்மாவிட மாட்டோம்’’ என்று இ.வி.கே.எஸ். இளங்கோவன் களத்தில் குதித்துவிட்டார்.

கூட்டணிக்குள் இருக்கும் இரண்டு கட்சிகளுக்குள் சண்டை என்றால், அதனை தீர்த்துவைக்க வேண்டிய ஸ்டாலின், இவர்கள் சண்டையை அமைதியாக வேடிக்கை பார்க்கிறார். ஏனென்றால், சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை இரண்டு பேரும் வெளியே போனாலும் நல்லது என்றுதான் நினைப்பார்.

இப்படி எல்லாம் கேவலப்பட்டு ஒரு எம்.பி. பதவி தேவையா, அதைத் தூக்கி கடாசுங்க வைகோ என்று அவரது கட்சிக்குள்ளேயே குரல் கேட்கிறது. அப்படி செய்வாரா வைகோ?