ஸ்டாலினுக்கு கடும் எச்சரிக்கை விடும் இந்து அமைப்புகள். மன்னிப்பு கேட்பாரா ஸ்டாலின்.

முத்துராமலிங்க தேவர் விழாவில் திருநீற்றை கீழே போட்டதன் மூலம் இந்து மக்களையும் முக்குலத்தோரையும் இழிவுப்படுத்திய ஸ்டாலின், வருத்தம் தெரிவிக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


இதுகுறித்து பேசியிருக்கும் கருணாஸ் எம்.எல்.ஏ., ‘’இது முழுக்க முழுக்க தேவர் சமுதாயத்தை அவமானப்படுத்தியிருக்கும் நிகழ்வு. எனவே ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

அதேபோன்று, பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, “குரு பூஜை விழாவில் முத்துராமலிங்க தேவரை அவமானப்படுத்துவது போல ஸ்டாலின் நடந்துகொண்டார். திருநீற்றை டால்கம் பவுடர் போல பயன்படுத்தியுள்ளார். கொள்கையை விட்டுக் கொடுக்காத பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், கொள்கையே இல்லாத ஸ்டாலின் நடந்துகொண்ட விதம் மன்னிக்க முடியாத குற்றமாகும். இச்சம்பவத்துக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் வைரலாகி இருப்பதையொட்டி திமு.க.வினர் கடும் அப்செட்டில் உள்ளனர். ஸ்டாலின் திருநீறை கழுத்தில் பூசினாரே தவிர, கீழே கொட்டவில்லை என்று விளக்கம் கொடுத்து வருகின்றனர்.