பா.ஜ.க ஏன் சூர்யா குடும்பத்தை விரட்டுகிறது ...? திருப்பதி கோயில் விவகாரத்தில் கைது செய்யப்படுவாரா சிவகுமார்..?

திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து நடிகர் சிவகுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பேசிய ஒரு பேச்சை, ஆதாரமாக வைத்து அவர் மீது வழக்கு தொடுத்துள்ளது, திருப்பதி தேவஸ்தானம்.


திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து நடிகர் சிவகுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பேசிய ஒரு பேச்சை, ஆதாரமாக வைத்து அவர் மீது வழக்கு தொடுத்துள்ளது, திருப்பதி தேவஸ்தானம்.

சூர்யா விவகாரம், ஜோதிகா விவகாரம் தொடர்ந்து இப்போது சிவகுமார் பேச்சு சர்ச்சை ஆவதற்கு காரணம் என்னவென்பது இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு, பா.ஜ.க.வின் தலைவர்கள் சிலர் சிவகுமாரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

சிவகுமாரை எப்படியாவது பா.ஜ.க.வில் இணைக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம். ஆனால், அவர்களுக்குப் பிடிகொடுத்துப் பேசவில்லை சிவகுமார். அப்போது முதலே பா.ஜ.க.வினருக்கு சிவகுமார் எதிரியாகிப் போனார்.

அதன்பிறகு மீண்டும் அவரை சந்தித்து, பா.ஜ.க. வில் சேர்ந்தால் அவருக்கு "பத்ம பூஷன்" விருது வழங்கப்படும் என்று ஆசை காட்டினார்கள். அதையும் மறுத்துவிட்டார் சிவகுமார். அந்த ஆத்திரத்தில்தான் சூர்யா, ஜோதிகா என்று யார் என்ன பேசினாலும், அதை மிகப்பெரிய விமர்சனமாக மாற்றி வருகிறார்களாம்.. இந்த விஷயத்தில் எப்படியும் சிவகுமாரை கைது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இந்த தாக்குதலை ஜோதிகாவை முன்வைத்து செய்வதுதான் கொடுமை. அதாவது மாற்று மதத்தவர் சூர்யாவை மதம் மாறச் சொல்லி வற்புறுத்துகிறார் என்றும் செய்தி பரப்புகிறார்கள். கட்சியில் சேரலைன்னா இப்படியெல்லாமா செய்வாங்க...?