நாங்குநேரியில் காங்கிரசுடன் மோதப் போவது பிஜேபி? அதிமுக கூட்டணி குஸ்தி!

நாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளில் நடக்க இரும்கும் இடைத்தேர்தல்களுக்கு அதிமுக இன்று முதல் வேட்புமனுக்களை வாங்கப் போவதாக அறிவித்திருக்கிறது.


அதே சமையம் பிஜேபியில் சிலர் டெல்லிக்குப் போய் நாங்குநேரி தொகுதி குமரிமாவட்டத்தை ஒட்டி இருப்பதால் நமக்கு அங்கே செல்வாக்கு இருக்கிறது. எதிர்த்து நிற்கப்போவத் காங்கிரஸ் கட்சி என்பதால் போட்டி கடுமையாக இருக்காது.அதிமுக கொஞ்சம் ஒத்துழைத்தால் ஈசியாக ஜெயிக்கலாம் என்று மேலிடத்தில் பேசி வருகிறார்களாம்.

தமிழக பிஜேபி தலைவர் பதவி காலியாக இருப்பதால் இந்த விவகாரத்தில் டெல்லிதான் முடிவெடுக்குமாம்.தமிழகத்தில் ஒரு எம்.பி கூட இல்லாத நிலையில் இந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் வென்று சட்டசபைக்குள் நுழைந்தால் மக்களை கவர முடியும் என்று நம்புகிறார்களாம்.

இந்த கோஷ்ட்டி வேட்பாளரைக்கூட முடிவு செய்து விட்டதாம் . பொன்னார் அல்லது நைனார் நாகேந்திரனை நிற்கவைக்கப் போகிறார்களாம்.இதை அதிமுக தரப்பு எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இது மட்டுமல்ல புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் பிஜேபி நிற்கப்போவதாக சொல்லித் தொடர்ந்து அதிமுகவின் வயிற்றில்.புளியை கரைக்கிறார்கள் காவிக் கட்சியினர்.