கமலும் ரஜினியும் சேரவே மாட்டங்களாம்..! சொல்றது கமல்ஹாசனின் ஆளுதான்.

கமல்ஹாசனின் மக்கள் நிதி மய்யத்தில் இருக்கும் ஒரு முக்கியமான நபரின் பதிவு இது. அவரது கூற்றுப்படி கமலும் ரஜினியும் ஒன்றுசேர வாய்ப்பே இல்லை என்கிறார். அதைப் படித்துப் பார்த்து, அவர் சொல்றது சரியா என்று பாருங்கள்.


கமல்ஹாசனின் நேற்றைய பத்திரிகையாளர் கூட்டம் ஒரு கேள்விக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டதாக தொலைக்காட்சிகள் அறிவிக்கின்றன. நண்பர்கள் எனக்கு கேள்விகளை அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். சிலர் வாழ்த்துக்களையும் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல வேண்டிய சில வார்த்தைகள் இருக்கின்றன.

அந்த வார்த்தைகள் இதுதான், .கமல்ஹாசன் ஒரு முழு அரசியல்வாதி ஆகி இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் பாரதிராஜா கமல்ஹாசனின் அரசியல் அறிவு குறித்து பேசும்போது இப்படி சொன்னார், “அவனுக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றாங்க. அப்படி எல்லாம் அவன்கிட்ட சொல்லாதீங்கய்யா!. அவன் அதையும் கத்துக்கிட்டு வந்து உங்க முன்னாடி நிப்பான்’’ 

அதுதான் நடந்து இருக்கிறது. பராதிராஜாவின் அந்தச் ‘சொல்’தான் இப்போது கமலிடன் நின்று நிலவுகிறது. ரஜினி வெளிப்படையாக பேசுபவர், ஒரு வெள்ளந்தி என்பது ரஜினி குறித்து பொதுவாக பேசப்பட்டு வரும் கருத்து. அவர் இப்போது வேறு ஒரு குரலில் பேசி வருகிறார். அவருடைய வெளிப்படைத் தன்மை அவரிடம் இருந்து காணாமல் போயிற்று.

உண்மையில் வெளிப்படையாகவும், உண்மைகளை தோலுரித்துப் பேசுவதில் வெள்ளந்தியாகவும் வலம் வருபவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்தான், இன்றைக்கு, திரு கமல்ஹாசன் தன்னை சற்று மாற்றி அமைத்துக் கொண்டு இருக்கிறார். தன்னையும் தனது இயக்கத்தையும் சமூகம் பயன் பெறும் முறையிலான வளர்ச்சி நோக்கில் எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்ற திட்டத்தோடு இயங்கத் தொடங்கி இருக்கிறார்.

அந்த தொடக்கத்தின் ஒரு நகர்வுதான் நேற்றைய அவருடைய பத்திரிகையாளர் சந்திப்பு. “அது எல்லாம் சரி! கமலும் ரஜினியும் இணைவார்களா?’’ கேள்விகள் அப்படியே இருக்கின்றன. எனது பதில் இதுதான்; “அதற்கு வாய்ப்பே இல்லை!’‘ 

“கமலே சொல்லி விட்டாரே?’’

அதைத்தான் சொன்னேன், “கமல் அரசியல் பேசுகிறார்’’, என்று. என்ன அந்த அரசியல்?

.கமல்ஹாசனின் நேற்றைய ரஜினி குறித்த பேச்சில் இரண்டு உண்மைகள் இருக்கின்றன.

1. வழக்கம்போல கமல், தனது நண்பன் ரஜினிகாந்தை அவர் மாட்டிகொண்டு இருக்கும் துன்பச் சூழலில் இருந்து காப்பாற்றிக் கொண்டு வந்து பத்திரமான இடத்தில் வைக்க நினைக்கிறார்.

2. தன்னுடைய அரசியல் விமர்சகர்களின் மத்தியில் எழுந்து நின்று தனது அரசியல் புலமையை பறைசாற்றுகிறார். எதிர்கட்சிகளின் கவனத்தை ஈர்க்கிறார்.

மற்றபடி, ரஜினியை தனது அரசியல் நகர்வுக்கு கமல் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் நமப்வில்லை. அத்தகைய பேச்சுக்கே இடம் இல்லை. கமல் புத்தம் புதிய அரசியல் வியூகம் அமைக்கிறார். அது மட்டு,ம் நிச்சயம். இப்படி பதிவு போட்டிருப்பவர் ம.தொல்காப்பியன்.