சேலம் பரபரப்பு! வயதான கிழத்துடன் தகாத உறவு! கண்டுபிடித்த மூதாட்டியை போட்டுத் தள்ளிய பெண்மணி!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கணவரின் தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவியை அடித்துக் கொன்ற கள்ளக் காதலி மனைவியின் நகைகளையும் அபகரித்த் கொடூரம் அரங்கேறியுள்ளது.


ஓமலூரை அடுத்த பாலிகடை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது  மனைவி லட்சுமி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் லட்சுமி அணிந்திருண்ட 7 சவரன் நகைகளையும் காணவில்லை என்று கூறப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட் போலீசார், நகைக்காக கொலையா?இயற்கை மரணமா?  தற்கொலையா? கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது லட்சுமியின் கணவர் சின்ன பையனுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பச்சையம்மாள் என்ற பெண்ணுக்கும் இடையே இடையே நெருக்கமான தொடர்பு இருந்தது தெரியவந்தபோது போலீசாரின் சந்தேகம் அவர்கள் பக்கம் திரும்பியது. அவர்களிடம் போலீசார் உரிய முறையில் விசாரித்த போது அதிர்ச்சித்  தகவல்கள் வெளியாகின.

சின்னப்பையனுக்கும், பச்சையம்மாளுக்கும் இருந்த உறவை கண்டித்த லட்சுமி, அது தகாத உறவு என சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து லட்சுமியுடன் தகராறில் ஈடுபட்ட பச்சையம்மாள் ஆத்திரத்துடன் மரப்பலகையைக் கொண்டு தாக்கியதில் லட்சுமி உயிரிழந்தது தெரிய வந்தது.

மேலும் லட்சுமி அணிந்திருந்த தங்க நகைகளை, சின்ன பையனின் உதவியோடு பச்சையம்மாள் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து  இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலுக்காக கள்ளக் காதலனின் மனைவியையே ஒரு பெண் கொலை செய்துள்ளார்.