டிரைவருடன் மனைவிக்கு தகாத உறவு..! கண்டுபிடித்த கணவன்..! பிறகு நேர்ந்த பயங்கரம்! திண்டுக்கல் திகுதிகு!

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறிய கணவரை கூலிப்படை வைத்து மனைவி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கள்ளக்காதலை கண்டிக்காத கணவர்கள் மட்டுமே உயிர் வாழமுடியும் என்ற நிலைமை வந்துவிடுமோ என்ற அச்சம் இந்த செய்தியை படிக்கும்போது வருகிறது. 

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவி அதிகாரி சிவபாலாஜி மனைவி சண்முகப்பிரியாவுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் 5 வயதில் மகன் இருக்கிறான்.

சண்முக பிரியாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பாண்டி என்பவருக்கும் முறையற்ற உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட சிவபாலாஜி இருவரையும் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளக் காதலன் பாண்டியும், சண்முகப்பிரியாவும் சிவபாலாஜியை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினர். இதற்காக தனது நண்பர்கள் விக்னேஷ், யோகராஜ், ராஜாராம் ஆகியோரின் உதவியை நாடினார் பாண்டி.

இதையடுத்து தனிமையில் பேசவேண்டும் என கணவர் சிவபாலாஜியை சாயஓடை பகுதிக்கு அழைத்து சென்றார் சண்முகபிரியா. அப்போது அங்கு தயாராக இருந்த பாண்டி தான் ஓட்டி வந்த காரை சிவபாலாஜி மீது இடித்தார். பின்னர் நிலை குலைந்து கீழே விழுந்த சிவபாலாஜி மீது மற்ற நான்கு பேரும் கல்லை தூக்கி போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.

சிவபாலாஜி விபத்தில் இறந்தது போல காட்சிகளை சண்முகப்பிரியா ஏற்பாடு செய்திருந்தாலும், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்தான் கணவரை கொல்ல திட்டமிட்டது என்பதை கண்டுபிடித்தனர். இதை அடுத்து நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜமுரளி தலைமையிலான போலீசார் சண்முகப்பிரியா, பாண்டி உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.