ராஜஸ்தானில் குடும்பத் தகராறில் கணவரை கொலை செய்து அவரது உடலை எரித்த மனைவியை கைது செய்துள்ளனர்.
வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்! மூடிய பெட்டிக்குள் கணவன் சடலம்! மனைவி அரங்கேற்றிய திடுக் திக் சம்பவம்!
ராஜஸ்தான் மாநிலம ஆழ்வார் மாவட்டத்தில் குல்தீப் யாதவ், நிஷா தம்பதி வசித்து வந்தனர். கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் திருமணம் ஆன இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்படவே கணவர் குல்தீப் யாதவை கொலை செய்து ஒரு பெட்டிக்குள் அவரது உடலை போட்டு மூடியுள்ளார் நிஷா.
பின்னர் கணவர் காணாமல் போய்விட்டதாக உறவினர்களிடம் நாடகம் ஆடியதை அடுத்து அவர்களும் குல்தீப் யாதவை பல இடங்களில் தேடி உள்ளனர். பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே பெட்டியில் வைத்திருந்த சடலம் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் செய்வதறியாத தவித்த நிஷா அந்த பெட்டி இருந்த அறையை தீயிட்டு கொளுத்தினார். பழைய பொருட்களுடன் நிஷாவின் கணவர் குல்தீப்பின் உடலும் எரிந்து சாம்பலானது.
பின்னர் எரிந்த குப்பைகளை தோட்டத்தில் வீசிவிட்டு வருமாறு நிஷா மகனிடம் கூற அந்த சிறுவனும் மொத்தமாக மூட்டை கட்டி எடுத்து சென்று வீசினார். அப்போது சரியாக எரியாத நிலையில் கொஞ்சம் முடியும் மண்டை ஓடும் இருந்ததை பார்த்து சிறுவன் அதிர்ச்சி அடைந்தான். பின்னர் அவன் கொடுத்த தகவலில் உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். பின்னர் நிஷாவிடம் தீவிர விசாணை நடத்தி அவரை போலீசார் கைது செய்தனர்.
தந்தை இறந்தால் அவர் சிதைக்கு தீ மூட்டவேண்டிய கடமை உள்ள மகனுக்கு எரிக்கப்பட்ட தந்தையின் உடல் பாகங்களை குப்பையில் வீசிய துர்பாக்கிய சம்பவம் சிறுவனுக்கு ஏற்பட்டது கொடூரத்தின் உச்சம்தான்.