கணவனின் ஆணுறுப்பை வெட்டி நாய்க்கு உணவாக போட்ட மனைவி! கேட்போரை அதிர வைக்கும் சம்பவம்!

கணவர் கொடுமைப் படுத்தினால் விவகாரத்து செய்யும் பெண்கள், அல்லது தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள், ஏன் கணவரை கொலை செய்யும் பெண்களை கூட பார்த்து இருக்கிறோம். ஆனால் கணவர் மீது உள்ள ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததது மட்டும் இன்றி அவரது பாலியல் உறுப்பை வெட்டி நாய்களுக்கு உணவாக போட்ட சம்பவம் பல கணவர்களின் நெஞ்சை கதி கலங்க வைத்துள்ளது.


உக்ரைன் நாட்டின் ஓபாரிவ் கிராமத்தில் ஒலேக்ஷாண்ட்ர் – மரியா தம்பதி வசித்து வந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 25ம் தேதி வீட்டிற்கு வந்த ஒலேக்ஷாண்டர் கொல்லப்பட்டு கிடந்தார். இதை அடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் கணவரை கொலை செய்ததாக மரியா ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கணவர் ஒலேக்ஷாண்டர் பல வருடங்களாக சித்ரவதை செய்து வந்ததாகவும் அதனால் அவரை கொடூரமாக கொலை செய்ததாகவும் மரியா நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார். முதலில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கழுத்தை நெரித்து கொன்றார் மரியா. ஆத்திரம் தீரவில்லை என்பதால் பின்னர் ஒரு கோடாரியால் கணவரின் தலையை வெட்டி எரிந்துள்ளார் மரியா.

அதன் பின்னரும் ஆத்திரம் தீராமல் கணவரின் ஆண் உறுப்பை வெட்டி அவர் ஆசையாக வளர்த்து வந்த இரண்டு நாய்களுக்கு உணவாகப் போட்டார். மரியா நீதிமன்றத்தில் கடைசியாக கூறிய வார்த்தைகளை கேட்டு நீதிமன்றமே ஆடிப்போனது.

இந்த செய்தி உக்ரைன் நாட்டு ஊடகங்களில் வெளியானதை அடுத்து எவ்வளவு குடித்து விட்டு வந்தாலும் மனைவியுடன் தகராறில் ஈடுபடக்கூடாது என அங்கிருந்த கணவான்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டதாக தகவல்.