சென்னையில் கணவனை பிரிந்து 6 ஆண்டுகள் கழித்து கணவனுடன் சேர்ந்து வாழ வந்த மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி உடம்பில் பார்க்க கூடாததை பார்த்த கணவன்! பிறகு அரங்கேறிய திக்திக் சம்பவம்!

சென்னை புழல் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவீரன் 48, மற்றும் இவரது மனைவி சஜினி 39, இவர்களுக்கு திருமணமாகி 21 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வெற்றி வீரன் சஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது.இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு முற்றும் நிலையில் சஜினி அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார்.
பிறகு வெற்றிவீரன் வந்து சமாதானப்படுத்தி அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமான நிலையில் சஜினி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு பல வருடங்களாக திரும்பி வராமல் இருந்துள்ளார்.இந்நிலையில் தனது இரு மகள்களுடன் வெற்றிவீரன் தனிமையில் வசித்து வந்துள்ளார்.சஜினி சென்று 6 ஆண்டுகள் ஆன நிலையில் தனது மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர மகள்கள் வற்புறுத்தியதால் வெற்றிவீரன் தனது மனைவியை வீட்டிற்கு அழைப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அவரது மனைவி ஒப்புக் கொண்டு கணவருடன் சேர்ந்து வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து சஜினி அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது கையில் டாட்டூ ஒட்டி இருப்பதை பார்த்த வெற்றிவீரன் அதுபற்றி கேட்டுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அந்த சமயத்தில் மகள்கள் இருவரும் உறவினர் வீட்டிற்கு சென்றதால் வீட்டில் கணவன் மனைவி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த வெற்றிவீரன் சமையலறையில் இருந்த அரிவாளை எடுத்து சஜினியின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த வெற்றிவீரன் உடனே காவல் நிலையத்திற்குச் சென்று தான் மனைவியை கொலை செய்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்து சரணடைந்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெற்றிவீரனை தற்போது கைது செய்துள்ளனர்.