கள்ளக்காதலனை வீட்டுக்கே அழைத்து உல்லாசம்! நேரில் பார்த்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்!

கர்நாடகாவில் தன் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காரணத்தினால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் அருகே பிளிகெரே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்காடனஹள்ளி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அவர்கள் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில்  கொலை செய்யப்பட்டது சிவக்குமார் என்பதும், அவர் மைசூரு குங்க்ரால் சத்திரம் பகுதியில் தனது மனைவி திவ்யாவுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சிவக்குமாரை, அவருடைய மனைவி திவ்யா, கள்ளக்காதலன் சேத்தன் உள்பட கூலிப்படை 4 பேர் சேர்ந்து கொடூரமாக கொலை செய்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரது மனைவி திவ்யாவிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணையின் போதுமைசூரு மாவட்டம் குங்க்ரால் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கும் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே உள்ள பன்னங்கடி கிராமத்தைச் சேர்ந்த சேத்தன் என்பவருக்கும் இடையே கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம்  நாளடைவில் காதலாக மாறியது.  இவர்களுடைய காதல் விவகாரம், திவ்யாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு திவ்யா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தாது மட்டுமல்லாமல்,  திவ்யாவை மண்டியா மாவட்டம் உளிகெரே கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு திவ்யாவும், சிவக்குமாரும் மைசூரு மாவட்டம் குங்க்ரால் சத்திரம் பகுதியில் குடும்பம் நடத்தி வந்தனர்.

சிவக்குமார் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், கணவன் வேலைக்கு சென்ற நேரத்தில்  ஃபேஸ்புக் மூலம் மீண்டும் தனது பழைய காதலன் சேத்தனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் திவ்யா. இதையடுத்து மீண்டும் இருவரும் பழகத்தொடங்கினர். இந்த பழையக் காதல் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து, திவ்யாவின் கணவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சேத்தன் அடிக்கடி திவ்யாவின் வீட்டிற்கே சென்று அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். தினமும் இவர்கள் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். சேத்தன் வந்து போவதை அக்கம்பக்கத்தினரும், அப்பகுதியில் உள்ள சிலர்  திவ்யாவிடம் கேட்டனர். அப்போது அவர், சேத்தன் தன்னுடைய தூரத்து உறவினர் என்றும், அவர் தனக்கு அண்ணன் முறை என்றும் கூறி நம்ப வைத்தார்.

ஆனால் அவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஒருமுறை அவர்கள் இருவரும் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்ததை நேரில் பார்த்து விட்டதாகக் சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை சிவக்குமாரிடம் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சிவக்குமார், தனது மனைவி திவ்யாவையும், அவருடைய கள்ளக்காதலன் சேத்தனையும் அழைத்து கள்ளக்காதலை கைவிட்டுவிடும்படி கெஞ்சிக் கேட்டுள்ளார்.

இதனால் அவரை கொலை செய்துவிட வேண்டும் என்று நினைத்த திவ்யா, தனது கள்ளக்காதலன் சேத்தனிடம் கூறினார். அதையடுத்து சேத்தன், பிரபல ரவுடியுமான பரத் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய கூலிப்படையை கொலை திட்டத்தில் சேர்த்துக் கொண்டார். அதையடுத்து கடந்த மாதம் 29-ந் தேதி சேத்தன் உள்பட 3 பேரும் சேர்ந்து சிவக்குமாரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் சிவக்குமார் விபத்தில் பலியானது போல செட்டப் செய்துள்ளனர். பின்னர் தனது கணவரை காணவில்லை என சொல்லி திவ்யா அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் .ஆனால் அவருடைய நடவடிக்கையில் சிவக்குமாரின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிவக்குமார் காணாமல் போனது குறித்தும்  திவ்யாவின் நடவடிக்கை குறித்தும் உன்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திவ்யாவிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர் தான் கொலையாளி என்பதை கண்டறிந்தனர்

இதை எடுத்து போலீசாரிடம் இந்தியா தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர் தனது கள்ளக்காதலன் சேத்தன் உடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் திவ்ய ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து தலைமறைவாக உள்ள அவரது கள்ளக்காதலன் சேத்தன் மற்றும் கூலிப்படையினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.