திருவாரூர்: கணவன் என்றும் பாராமல் அவரது மனைவியே சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
50 வயதில் செக்ஸ் டார்ச்சர்! கணவன் தலையில் சுத்தியலால் ஒரே அடி! கதையை முடித்த மனைவி!

அகரநல்லூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், அதிமுக கிளை செயலாளராக இருந்த ரவி, தினசரி மது அருந்திவிட்டு, போதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். இதுதவிர, திங்களன்று இரவு சித்ரா மீது சந்தேகப்பட்டு, அவர் ஆபாசமாக திட்டியிருக்கிறார்.
பின்னர், அவர் உறங்கிவிட்டார். அப்போது, அதிகாலை நேரம் பார்த்து, எழுந்த சித்ரா, சுத்தியலை எடுத்து, கணவன் என்றும் பாராமல் தலையில் ஒரே அடியாக அடித்துக் கொன்றார். பின்னர் அதே சுத்தியலுடன் நேராக திருவாரூர் போலீஸ் நிலையம் சென்று, சித்ரா சரணடைந்தார். விசாரணையின் போது குடித்துவிட்டு வந்து கண்ட படங்களை பார்த்துவிட்டு கணவன் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக மனைவி கூறியுள்ளார்.
போதாக்குறைக்கு பலருடன் தன்னை தொடர்பு படுத்தி பேசியதாகவும், மிகவும ஆபாசமாக பேசி சித்ரவதை செய்ததால் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார் மனைவி. இதைக் கேள்விப்பட்டதும் போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மனைவியை கணவன்கள் கொலை செய்யும் வழக்கம் உள்ள நாட்டில், கணவனை மனைவியே அடித்துக் கொன்ற சம்பவம் திருவாரூர் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.