அண்ணியை உசார் செய்த நண்பன்! நெஞ்சை பிளந்து தலையை துண்டித்து நரபலி கொடுத்த தம்பி! நாமக்கல் பயங்கரம்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ததால் ஒரு நரபலி சம்பம் அரங்கேறி உள்ளது.


நாட்டா கவுண்டன் புதூர் அருகே மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது கையில் குத்தியிருந்த புனிதா, கவிதா என்ற பெயர்களை அடையாளம் கொண்டு அவர் குமாரப்பாளையத்தை சேர்ந்த தறி தொழிலாளி சின்ராஜ் என்பதையும் 1993ல் நடைபெற்ற கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.  

சின்ராஜ், சில தினங்களுக்கு முன்னர் கூள குமார் என்பவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கூளகுமாரை பிடித்து போலீஸ் துருவி துருவி விசாரித்தபோது சின்ராஜை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த சில மாதங்களாக கூளகுமாரும், சின்ராஜூம் நண்பர்களாக பழகிவந்தனர். எந்த சட்ட விரோத செயல்களுக்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே சென்று வந்துள்ளனர். இதற்கிடையே சின்ராஜை தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு அழைத்து வந்த சாப்பாடு போட்டுள்ளார் கூளகுமார்.

அப்போது உணவு பரிமாறிய கூளகுமாரின் அண்ணன் மனைவியுடன் பேசி அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் சின்ராஜ். இதையடுத்து அந்தப் பெண்ணை சின்ராஜ் தன்வசப்படுத்தியது தெரியவே கூளகுமாரின் குடும்பத்தில் பிரச்சனை உருவானது. குடும்பத் தகராறில் அண்ணி வீட்டை விட்டு வெளியேறி தனியாக சென்றுவிட்டடார்.

இதையடுத்து கூடிய உறவினர்கள் கூளகுமாரை கடுமையாக பேசினர். இதனால் ஆத்திரம்அடைந்த சின்ராஜிடம் நட்பாக பேசி சமய சங்கிலி பகுதிக்கு மது அருந்த அழைத்து சென்றுள்ளான். போதை தலைகேறிய நிலையில் சின்ராஜின் மார்பில் கத்தியால் குத்தியும் அவரது தலையை துண்டாக அருத்தும் நரபலியிடுவது போல உடலை இரண்டாக கிழித்து மிக கொடூரமாக கொலை செய்துள்ளார் கூளகுமார்.