பகலில் வழக்கறிஞர்! இரவில் கணவன் அனுமதியோடு விபச்சாரம்! வாரம் ரூ.10 லட்சம்! இளம் மனைவி வெளியிட்ட சீக்ரெட்!

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் வழக்கறிஞராக பணியாற்றி கொண்டும் அதே நேரத்தில் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இச்சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த லோவா மாகாணத்தைச் சேர்ந்தவர் காத்திரீன் சியர்ஸ் 30, இவருக்கும் ஜான் 35, என்பவருக்கும் திருமணமாகி அவர்களுக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் காத்திரீன் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பகுதி நேர வேலையாக பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.இது குறித்து அவரிடம் கேட்டபோது தனது கணவரின் அனுமதியுடன் தான் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாலியல் தொழில் ஒன்றும் அவ்வளவு கேவலமான தொழில் கிடையாது என்றும் தனது கணவரின் முழு அனுமதியோடு தான் இந்த தொழிலில் பகுதி நேரமாக ஈடுபட்டு வருவதாக காத்திரீன் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொழிலாளர்கள் மீதான தவறான கண்ணோட்டம் மாறவே தான் இவ்வாறு செய்வதாக கூறியுள்ளார். மற்றும் பாலியல் தொழிலில் மட்டுமே 1 வாரத்திற்கு  இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடிகிறது எனவும் தெரிவித்துள்ளார். வாரத்திற்கு 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே தான் ஏற்பதாகவும் கூறுகிறார்.

இதற்கு தனது கணவனும் ஆதரவளிப்பதாக காத்திரீன் கூறியுள்ளார். தனக்கு மிகவும் நெருக்கமான நபர்கள் சிலர் பாலியல் தொழிலில் தான் உள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் திருமணத்திற்கு முன்பே தான் பாலியல் தொழிலில் இருந்ததாகவும், சட்டக் கல்லூரியில் தனது கணவரை முதல் முறையாக பார்த்த போதே தான் ஒரு பாலியல் தொழிலாளி என்பதை கூறிவிட்டதாகவும் காத்ரீன் தெரிவிக்கிறார்.

இருந்தாலும் அதன் மூலம் கூடுதல் வருமானம் வருகிறது என்று எனது கணவரும் ஏற்றுக் கொண்டார். இதனால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் காத்ரீன் தெரிவிக்கிறார்.