அங்க மட்டும் போகாதடி..! காதல் மனைவி செயலால் உடல் முழுவதும் பிளேடால் அறுத்துக் கொண்ட கணவன்! அதிர்ச்சி காரணம்!

பல்லாவரத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் மீது புகார் கொடுக்க வந்த மனைவி உட்பட போலீசாரையும் மிரள விட்டுள்ளார் அந்த வாலிபர்.


சென்னையை அடுத்த பல்லாவரம் - அனகாபுத்தூரை சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜ், அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஐஷ்வர்யா இருவதுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் ஆன நிலையில், தொடர்ந்து கணவர் ஆரோக்கியராஜ், காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி ஐஷ்வர்யாவை குடித்து விட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாகவும், இது குறித்து இரு தரப்பு வீட்டினரும் தொடர்ந்து அறிவுரை கூறிய போதும் நிறுத்தாமல் தொடர்ந்து கணவர் ஆரோக்யராஜ் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனை அடுத்து வேறு வழி இல்லாமல், காவல் துறையில் புகார் அளிக்க வந்த மனைவி ஐஷ்வர்யா, எவ்வளவுய் சொல்லியும் கேட்காமல் புகார் அளிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திாடைந்த ஆரோக்யராஜ் மனைவி கண் முன்னதாகவே பிளேடால் கைகளில் 4 க்கும் மேற்பட்ட இடத்தில் கிழித்து கொள்ள, பதறிப்போன காவலர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.